பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப் பயணம் வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ள ஒபாமா நிர்வாகம், அவரது சித்தாந் தத்தால் இந்திய அமெரிக்க உறவில் இருந்த வரலாற்றுதயக்கங்கள் அனைத்தும் தீர்க்கப்பட் டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவு துணை அமைச்சர் நிஷாதேசாய் பிஸ்வால் கூறும்போது, ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சில் இந்தியா, அமெரிக்க கூட்டுறவு மூலம் ஆசியா முதல் ஆப்பிரிக்கா வரையும், இந்திய பெருங் கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரையிலும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத் தன்மையை நிலை நாட்ட முடியும் என்ற துணிச்சலான பார்வை தெரிந்தது. கடலில் சுதந்திரமாக செல்வதற்கும், பாதுகாப்பான முறையில் கடல்வழியாக வர்த்தகம் மேற்கொள்வதற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் சித்தாந்தம் நிச்சயம் உதவும்’’ என்றார்.

Leave a Reply