பிரதமர் நரேந்திரமோடி எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக பழைய ரூ.500, ரூ.1000-ம் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலானவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஒரு சில எதிர்க்கட்சிகள் மாட்டும் தங்கள் கருப்பு பணத்தை எப்படி மாற்றுவது என்ற பீதியில் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் விதிவிலக்கல்ல.

ராகுல்காந்தியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் கேரளகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மோடியின் இந்த நடவடிக்கையை வரவேற்று பாராட்டியுள்ளனர்.

கேரள காங்கிரஸ் எம்எல்ஏ.வான சபரி நாதன் பேஸ்புக்கில் தெரிவித்துள்ள கருத்தில் பிரதமர் மோடியின் இந்தசெயல் மிகவும் துணிச்சலானது. இதற்காக அவரை பாராட்டுகிறேன். பெரியளவில் கருப்பு பணத்தை பதுக்கிய வர்களுக்கு எதிராகவும் அவர் நடவடிக்கை எடுக்கவேண்டும். என்று கூறி உள்ளார்.இன்னொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பல்ராமும் பழைய ரூபாய்நோட்டுகளை ஒழித்ததற்காக பிரதமர் மோடியை பாராட்டி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Leave a Reply