ஜி20 மாநாட்டில் பிஃபா தலைவரைச் சந்தித்த பிரதமர் மோடி ஜெர்சி ஒன்றை பரிசாகப் பெற்றுள்ளார். 

அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் ஜி20 உச்சிமாநாடு நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியாசார்பில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றுள்ளார். 

இந்தக் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியாக அனைத்து நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, 2022ஆம் ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்துவதாக தெரிவித்தார். 

மேலும், இந்தநிகழ்ச்சியை முன்னிட்டு சர்வதேச கால்பந்து விளையாட்டு சம்மேளனமான பிஃபாவின் தலைவர் கியான்னி இன்ஃபான்டி னோவை மோடி சந்தித்தார். அப்போது, கியான்னி, மோடிக்கு அவரது பெயர் அச்சிடப்பட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.