அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய பிரதமர் நரேந்திரமோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ரஷ்யா, சீனா, ஐரோப்பிய நாடுகளின் தலைமைகளை போனில் அழைக்கும் முன்பாக இந்தியாவுக்கும் முக்கியம்கொடுத்துள்ளார்
 
டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதும், அமெரிக்காவின் அண்டை நாடுகளான கனடா மெக்சிகோ நாட்டு தலைவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இதன்பிறகு அமெரிக்காவின் இணைபிரியாத நண்பன் என வர்ணிக்கப்படும் இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் ஞாயிற்றுக் கிழமை தொலைபேசி அழைப்பு மேற்கொண்டார்
 
டொனால்ட் ட்ரம்ப். ஐந்தாவது நாடாக அவர் தேர்வுசெய்தது இந்தியாவைத்தான். வல்லரசுகள்  ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் எந்தஒரு நாட்டுக்கும் தொலைபேசியில் அழைப்புவிடுக்கும் முன்பாகவே இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். முன்எப்போதும் இல்லாத நடைமுறையாக உள்ளது இது. இருநாடுகள் நடுவேயான ஒருமைப் பண்புகள்தான் இயல்பான இந்தநட்பு நெருக்கத்திற்கு காரணம் என்கிறார்கள் சர்வதேச விவகாரங்களை கவனிக்கும் நிபுணர்கள்.

 

டொனால்ட் ட்ரம்ப் அதிபரானபிறகு அமெரிக்கா செல்லும் முதல் பிரதமர் என்றபெயருக்கு பாத்திரமாகப் போகிறவர் பிரிட்டீஷ் பிரதமர் தெரேசா மே. அதேநேரம், ட்ரம்ப், தேர்தலில் வெற்றிபெற்றதுமே, தொலைபேசியில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தவர்களில் முக்கியமானவர் இந்தியபிரதமர் நரேந்திர மோடி. பிரசாரத்தின்போதே பிரசாரத்தின்போதே ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது, இந்து ஜனநாயக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், பேசியபோது, இந்தியாவுடன் சிறப்பான உறவைபேண உள்ளதாக தெரிவித்தார். மேலும், மோடியை எனர்ஜட்டிக்கான தலைவர் என புகழ்ந்ததோடு, அவரோடு இணைந்துபணியாற்ற வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளதாகவும் அப்போது அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply