பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிரான, பலுாசிஸ்தான் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, நன்றிதெரிவிக்கும் வகையில், அங்குள்ள பெண் ஒருவர், 'ரக் ஷா பந்தன்' வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள, பலுாசிஸ்தான் பகுதி மக்கள், விடுதலை கோரி, பலுாச் தேசிய இயக்கத்தின் தலைமையில் போராட்டம் நடத்திவருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தினத்தின் போது ஆற்றிய உரையில், ''பலுாசிஸ்தான் மற்றும் ஆக்கிர மிப்பு காஷ்மீரில், பாகிஸ்தான் மனித உரிமைமீறலில் ஈடுபட்டு வருகிறது. அப்பகுதி மக்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும்,'' என கூறினார். மோடியின்பேச்சுக்கு, பலுாசிஸ்தான் மக்கள் வரவேற்பு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், பலுாச் மாணவர்சங்க தலைவர் கரீமா என்ற பெண், சமூக வலைதளம்மூலமாக, பிரதமர் மோடிக்கு, 'ரக் ஷா பந்தன்' வாழ்த்துசெய்தி அனுப்பியுள்ளார்.அதில், அவர் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு ஆளாகி, காணாமல்போன எத்தனையோ சகோதரர்களை, பலுாசிஸ்தான் சகோதரிகள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். பிரதமர் மோடியின் வார்த்தைகள், எங்களுக்கு ஊக்கம்அளிக்கிறது; அவர் எங்கள் சகோதரர். பாகிஸ்தானின் அடக்கு முறையை, சர்வதேச அரங்கில் எதிரொலிக்க உதவவேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply