மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ‘மோடியால் சாத்தியப்படும்’ என்ற வாசகத்தை பாஜக தேர்வுசெய்துள்ளது

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சரும் பாஜக தேர்தல் பிரசாரகுழு தலைவருமான அருண்ஜேட்லி கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகளில் 24 மணிநேரமும் பணியாற்றியுள்ளார். விரைவாக புரிந்துகொள்ளக்கூடிய அவர், சிக்கலான பிரச்னைகளில் விரைந்து முடிவெடுத்து வெற்றி கண்டுள்ளார்.

செயல்படகூடியவர் என்ற அவரது நற்பெயர், பெரும்பாலான இந்தியர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவேதான் ‘மோடியால் சாத்தியப்படும்’ என்ற கோஷத்தை தேர்வுசெய்துள்ளதாக ஜேட்லி தெரிவித்தார்.

Leave a Reply