வரும் ஜனவரி 16 ஆம் தேதி பிரதமர் மோடி பேசும்பேச்சை மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 16-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்தநிகழ்ச்சி தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப் பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற தமிழகத்தில் இருந்து 66 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.

ஜனவரி 16-ஆம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை அனைத்துவகை பள்ளிகளிலும் படிக்கும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தவறாமல் பார்க்கவேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

எனவே, அன்றையதினம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை ரத்து செய்யப் படுமோ என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும் போது, பொங்கலுக்கு மறுநாளான ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும்இல்லை என்று அவர் கூறினார்.

பொங்கலுக்கு மறுநாள் விடுமுறையின் போது மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியது கட்டாயமில்லை. பிரதமர் மோடியின்பேச்சை மாணவர்கள் வீட்டில் இருந்தே கேட்டுக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்..

Comments are closed.