பிரதமர் நரேந்திரமோடியை பாராட்டிய அரசு அதிகாரி மீது கேரள அரசு எடுத்த நடவடிக்கையை, உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கேரளாவில், முதல்வர் உம்மன்சாண்டி தலைமையிலான, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், நரேந்திரமோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, 2013ல், கேரளாவிலுள்ள சிவகிரி மடத்துக்கு (ஸ்ரீ நாராயண குருவால் ஏற்படுத்தப்பட்டது) வருகைதந்தார். அப்போது, கேரள கால்நடை பல்கலை கழக துணைவேந்தராக இருந்த டாக்டர் அசோக், நாளிதழ் ஒன்றில், மோடியைபாராட்டி, கட்டுரை எழுதினார்.

அக்கட்டுரையில், குஜராத் கலவரத்தை மோடி உரியமுறையில் தடுத்ததாகவும், அதேநேரம், முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலையை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சியில் தான் சீக்கியர்களுக்கு எதிராக இனப் படுகொலை நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்காக, கேரள அரசு, அசோக்மீது, துறைரீதியான நடவடிக்கை எடுத்தது. மேலும், அசோக்கை பணியில் இருந்து, நீ்க்கியது. கருத்து சுதந்திரத்தை கேரள அரசு நசுக்குவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின. இதனிடையே, அரசு நடவடிக்கையை எதிர்த்து அசோக் தொடர்ந்தவழக்கில், பணி நீக்க உத்தரவை கேரள ஹைகோர்ட் ரத்துசெய்தது. ஆனால், துறை ரீதியான நடவடிக்கைக்கு தடை விதிக்க வில்லை. இதையடுத்து அசோக், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். கேரள அரசின் நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட் தடை விதித்துள்ளது.

Leave a Reply