இதற்கு முன்னர் இருந்த ஆட்சியின் அமைச்சர்கள் எந்தளவுக்கு வேலைசெய்தனர் என்று தெரியாது. ஆனால், மோடி அமைச்சரவையின் அமைச்சர்கள் சந்தித்த வேலைப்பளு அளவிட முடியாதது. அதற்கு சான்று அவ்வப்போது உடல் நலம் குன்றிய அமைச்சர்கள்.

மனோகர் பாரிக்கர் :

அதில் அதிகம் உடல்நிலையை கெடுத்துக்கொண்டது மாண்புமிகு முன்னாள் முதல்வரும் அமைச்சருமான மனோகர் பாரிக்கர். பாதுகாப்புத் துறையில் ஆயுதங்கள் வாங்கும்போது சர்வதேச இடைத்தரகர்கள் புகுந்து விளையாடுவர். கண்ணிலே விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு இரவுபகலாக கோப்புகளை பார்த்தால் மட்டுமே ஊழல் இல்லாத ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடியும். ஏற்கனவே உடல் நலம் குன்றிய பாரிக்கர் மேலும் மேலும் உடல்நிலையை கெடுத்துக் கொண்டார்.

பின்னர் மீண்டும் கோவா முதல்வர் ஆன பின்பும் உடல்நலம் மிகவும் மோசமடைந்த நிலையில் தான் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றார். மூக்கிலே குழாயுடன் உருக்குலைந்த நிலையிலும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார். மேலும் உடல் நலம் குன்றி இறந்தே போனார்.

அருண் ஜெட்லீ :

நிதித்துறையும், தகவல் ஒளிபரப்புத் துறையும் ஒருகட்டத்தில் ஒரே நேரத்தில் பார்த்துக்கொண்டார். இரண்டுமே மிகமிக வேலைப்பளு கொண்ட துறைகள். பம்பரமாய் சுற்றி சுழண்டால் மட்டுமே வேலைகளை முடிக்க முடியும். ஏற்கனவே சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டுவந்த அவர், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து உட்கார்ந்து உடல் ஊதி மிகவும் குண்டாக ஆனார். இப்போது அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார்.

அவராக விரும்பி அமைச்சர் பதவி வேண்டாம் என்றார். சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்ளவிடில் சர்க்கரை அளவுகூடும். எதையும் பொருட்படுத்தாமல் பலமணிநேரம் தொடர்ந்து கோப்புகளை பார்த்தார். உடல் நலம் குன்றினார்.

சுஷ்மா ஸ்வராஜ் : வெளியிறவுத்துறையின் வலிமை என்ன என்றே இவர் வந்த பிறகுதான் தெரிந்தது. ஒரு tweet இலோ, ஒரு கடிதத்திலோ வெளிநாடு வாழ் இந்தியர்களின் கண்ணீரை துடைத்தார். உலகிலுள்ள 60 மேற்பட்ட நாடுகளில் நாடுகளிலும் வாழும் இந்தியர்கள் யாருக்கேனும் பிரச்சனையா என்று அல்லும்பகலும் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

சிறுநீரகம் பிரச்சனை ஏற்படபோதும், தீவிரமாக அமைச்சர் பணிகளை மேற்கொண்டிருந்தார். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டபின், மீண்டும் தனது துறையில் கவனம் செலுத்தினார்.

2015 இல் உள் நாட்டுக்கலவரத்தில் ஏமேனில் சிக்கிக்கொண்ட 4640 இந்தியர்களை மீட்க இவர் செய்த operation ராஹத் உலக நாடுகளின் பார்வையை ஈர்த்தது. அத்தோடு நேசக்கரங்களுடன் 960 வெளிநாட்டினரையும் இவர் காப்பாற்றி அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்தார்.

(இவர் அதிகம் காப்பாற்றியது அரபுநாடுகளில் கொடுமைகளுக்கு ஆளான கேரள முஸ்லிம்கள். ஆனால், இந்த அரசு என்னவோ முஸ்லிம்களுக்கு எதிரானதாக தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது)

இப்போது அவராகவே அமைச்சர் பதவியை ஏற்க மறுத்துள்ளார்.

உமா பாரதி:

நீர்நிலைகளுக்கான அமைச்சரான இவர், தீவிர முதுகுவலியிலும் சிறப்பான பணிகளை மேற்கொண்டார். கங்கை நதி தூய்மை எனும் மிகப்பெரிய பொறுப்பை மோடி இவருக்கு கொடுத்திருந்தார். முழுமையாக சுத்தப் படுத்துதல் என்பது குறுகிய காலத்தில் சாத்தியம் இல்லையென்றாலும், மிக சிறப்பாகவே தன்பணிகளை மேற்கொண்டார்.

முதுகு மற்றும் மூட்டு வலியின் காரணமாக, தற்போது ஓய்வில் உள்ளார்.

இந்த அமைச்சர்கள் எல்லாம் நினைத்திருந்தால் அடுத்தநொடி வெளிநாட்டிற்கு பறந்து சிகிச்சை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் தங்களை கவனித்துக்கொள்ளகூட நேரம் இன்றி ஓடினர். நாட்டு மக்களுக்காக ஓடினர். உடல் நிலையை கெடுத்துக்கொண்டனர்.

இவர்கள் ஒன்றும் அப்போல்லோவிலோ, காவேரி மருத்துவமனையிலோ மருத்துவம் பார்க்கவில்லை. மத்திய அரசின் AIIMS இல் தான் மருத்துவம் பார்த்து கொண்டனர்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக 68 வயதிலும் Jetlag என்னும் நேர மாற்றத்தினால் வரும் அசதியையும் மீறி நாடுநாடாக போய் இந்தியாவின் பெருமையை பறை சாற்றிக்கொண்டிருக்கிறார் பாரத பிரதமர் மோடி.

வேலைப்பளு – ஆம், மோடி அமைச்சரவையில் நீங்கள் பக்கோடா தின்று கொண்டு ஊர் சுற்றிக்கொண்டு இருக்கமுடியாது. வேலை செய்ய வேண்டும். தூங்க கூட நேரமின்றி வேலை செய்ய வேண்டும்.

–கவுதம் சேகரன்

Comments are closed.