1. ஜன்தன் யோஜனா! ( Zero balance account)

சுமார் 6000 கோடி ரூபாய்கள் இந்த கணக்குகளில் இதுவரை டெபாசிட் மக்கள் சுய விருப்பத்தால் செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் மக்களிடம் முடங்கிக் கிடந்த பணம், வங்கிகளுக்கு கொண்டுவரப்பட்டு முதலீடுகளுக்குப் பயன் படுத்தப்படுகிறது.

 

2. ஏழைகளுக்கான ஓய்வூதிய திட்டம்! இதுவரை 12 .5 லட்சம் பேர் இதனால் பயனடைந்துள்ளார்கள். ஒரு நபர் வருமானம் உள்ள ஏழை குடும்பங்கள் வருமானம் ஈட்டுபவர் இறக்கும் போது இந்த திட்டம் அவர்களுக்கு தொடர்ந்து கை கொடுக்கும்.

 

3. ஏழைகளுக்கான காப்புறுதி திட்டங்கள்! இதுவரை 12 .3 கோடி பேர் விபத்து காப்புறுதி திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள்.  2.92  கோடி பேர் ஆயுள் இன்சூரன்ஸில் இணைக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் ஏழைகள் விபத்தில் இறந்து போனாலோ, திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறந்து போனாலோ காப்பீட்டுத் தொகையை அந்த குடும்பங்கள் பெறும்.

 

4. மேக் இன் இந்தியா திட்டம்!

இதுவரை 31 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டு நிறுவனங்களால் இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் இனி தங்களது தொழிற்சாலைகளை இந்தியாவில் நிறுவும். அதன் மூலம் பல லட்சக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. 

 

5. உள்நாட்டு இராணுவ தளவாடங்கள் தாயாரிப்பு திட்டம்!

 தொடர்ந்து வெளிநாடுகளிடம் இருந்தே ஆயுதங்கள் வாங்குவதை தவிர்க்க, உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிக்க முடிவு. இதன் மூலம் நமது அந்நிய செலவாணி பெருமளவில் சேமிக்கப்படும். மேலும் ராணுவ தளவாடத் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு பெறும்.

 

6. தொழில் செய்ய நம்பிக்கையான நாடுகளில் பட்டியலில் இந்தியா 12 இடங்கள் முன்னேறி  130  வது இடத்தை பிடித்துள்ளது. ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியால் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியா 50 இடங்களுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

 

7.  மோடி உலகின் பல நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், பொருளாதாரத்தில் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. கருப்பு பண தடுப்பு நடவடிக்கைக்குப் பிறகும், இந்தியாவின் பொருளாதாரம் சீனாவை பின்னுக்கு தள்ளி 7 % வளர்ச்சி காணும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

 

8. மோடியின் அதிரடி நடவடிக்கைகளால் ஏர் இந்தியா,  பிஎஸ்என்எல், இந்தியன் ஆயில் போன்ற பல பொதுத்துறை நிறுவங்கள் நட்டத்தில் இருந்து இன்று லாபம் ஈட்டும்

நிறுவங்களாக மாறியுள்ளன.   

 

9. இந்தியா முழுமைக்கும் தடையில்லா மின்சாரம்!

உதய் மின் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் இடையே மின்சாரம் பகிர்ந்து கொள்ளும் திட்டத்தால் இன்று பல மாநிலங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் மின்சாரத்தையே பார்த்திராத பல ஆயிரம் கிராமங்களுக்கு இன்று மின்சாரம் கிடைக்கிறது. 2018 க்குள் மின்சார வசதி இல்லாத கிராமம் 100%இருக்காது

 

10. க்ரீன் எனர்ஜி – க்ளீன் எனர்ஜி! திட்டத்தின் கீழ் பல ஆயிரம் கோடிகள் முதலீடு செய்யப்பட்டு, சூரிய ஒளி மூலம் 5000 MW, காற்றாலை மூலம் 2300 MW மின்சாரம்உ ற்பத்தி செய்யப்படுகிறது. விரைவில் இது 2 GW ஆக உயர்த்தப்படும்.              

 

11. OROP!

சுமார் 60 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்த நாட்டைக் காக்கும் இராணுவ வீரர்களுக்கான OROP ஓய்வூதியத் திட்டம் மோடியின் ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

12. இந்தியன் ரயில்வே!

இதுவரை ரயிலையே பார்த்திராத இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்கு ரயில் பாதை அமைத்து ரயில் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளோடு இணைக்கப்பட்டுள்ளது.

 

13. மோடி ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாக எந்த ஊழலும் இல்லாத வெளிப்படையான அரசாங்கம் நடக்கிறது. இதன் மூலம் பொதுமக்களின் வரிப் பணம் லஞ்சம் மற்றும் ஊழல்களால் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது.

 

14. ஸ்மார்ட் சிட்டி!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் இந்தியாவின் 150 நகரங்கள் தரம் உயர்த்தப்பட திட்டம் தீட்டப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

15. எய்ம்ஸ் மருத்துவமனை!

டெல்லியில் மட்டுமே இயங்கி வந்த  எய்ம்ஸ் மருத்துவமனை இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் ஆரம்பிக்கப்படுகிறது. இதன் மூலம் ஏழை மக்கள் உலகத்தரம் வாய்ந்த மருத்துவத்தை இலவசமாக பெறுவார்கள்.                   

 

16. ஸ்வாட்ச் பாரத்!

சுத்தமான இந்தியா திட்டத்தின் மூலம் கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் ரயில் நிலையங்கள், அரசாங்க கட்டிடங்களில் சுத்தமாகி வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை கழிப்பறைகளையே பார்த்திராத பல பள்ளிகள் கிராமங்கள்  வீடுகள் கழிப்பறை வசதிகளை பெற்றுள்ளன.

 

17. நிதி யோக்!

 மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களில் மாநில அரசுகளையும் இணைத்துக் கொள்வதன் மூலம் உண்மையான ஜனநாயகம் பேணப்படுகிறது. மாநில அரசின் குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்கிறது.

 

18. டிஜிட்டல் இந்தியா!

 இந்த திட்டத்தின் மூலம் அரசின் எல்லா திட்டங்களுக்கும் இணைய வழி மூலமே கிடைக்கிறது. அரசின் நடவடிக்கைகள், புதிய ஒப்பந்தங்கள் எல்லாவற்றையும் இணைத்தின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். இதனால் நேர விரயம் ஆவது தடுக்கப்படுகிறது. மக்கள்  லஞ்சம் கொடுக்க தேவை இல்லை 

 

19. நுகர்வோர் பொருட்கள் விலை குறைப்பு!

 கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் வெளியில் புழங்கி வந்த கருப்பு மற்றும்க கள்ள நோட்டுக்கள் ஒழிக்கப்பட்டு, அத்தியாவாசிய பொருட்களின் விலை மிகவும் குறைந்துள்ளது. நிலம் மற்றும் வீடுகளின் விலைகள் குறைந்து நடுத்தர மக்கள் வாங்கி பயன் அடைய வழி செய்யப்பட்டுள்ளது.

 

20. நதி நீர் இணைப்பு திட்டம்!

நதி நீர் இணைப்பு திட்டத்தில் இணைந்த மாநிலங்களில் ஓடும் நதிகள் எல்லாம் இணைக்கப்பட்டு, மழை காலங்களில் கிடைக்கும் நீர் வீணாகாமல் மற்ற நதிகள் மூலம் ஏரிகள் மற்றும் அணைகளில் தேக்கி வைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

 

21. வெளிநாட்டு உறவு!

சீனா பாகிஸ்தான் தவிர்த்து உலகில் உள்ள பல நாடுகளுடன் பல புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டு, உறவு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியர்கள் பல நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லவும், அந்த நாடுகளில் தடையின்றி முதலீடு செய்யவும் உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

22. இந்தியர்கள் என்றால் லஞ்சம் ஊழல் என்ற எண்ணம் மட்டுமே இருந்து வந்த நிலையில், கடந்த மூன்றாண்டுகளில் இந்தியாவின் மதிப்பு உலக நாடுகளிடையே மிக மிக உயர்ந்துள்ளது. 

 

23. பயங்கரவாதத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்ற நிலையில் இருந்து, பாதுகாப்பான நாடு என்ற நிலைக்கு இந்தியா உயர்ந்துள்ளது.

 

இன்னும் பல சாதனைகளை மோடிஜி அவர்கள்  செய்துள்ளார் செய்வார்கள்.

அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பதே நம் கடமை.

 

பாரத் மாதாகீ ஜெய் !! ஜெய் ஹிந்த் !!

Leave a Reply