என்னுடைய அரசியல் ஜோசியத்தில் தோன்றுவது; அமேரிக்கா ஒரு சிறிய கொள்கை மாற்றம் செய்ததில் – எண்ணெய் விலை வீழ்ச்சியினால் அரபு நாடுகள் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அவர்கள் பொருளாதாரம்தான் உலகத்தில் தீவிர வாதத்திற்கு துணை.


மேலும் அமெரிக்காவின் ராஜதந்திரம் என்று நாம் ஆயிரம் கூறினாலும், யார் யார் எப்போது எப்படி போவார்கள் என்பதை நன்கு யூகிக்கும் திறம் கொண்ட உளவுப்பிரிவு அவர்களிடம் உள்ளது . அமேரிக்கா இதுவரை மிக மிக செல்வாக்கான அரபு நாடுகளுக்கு பெரிய தொழில் நுணுக்கம், தொழில் உதவி எதுவும் செய்யவில்லை. அணு ஆயுத பரவல் தடுப்பு என்று ஐநா மூலம் கண்காணிப்பு. — """சிந்திக்காமல் அணுசக்தியை உபயோகிப்பவர்கள் இவர்கள்""" என்று அறிந்தே — இந்த நாடுகளை கொஞ்சம் அமுக்கி வைத்தது வந்தது.

ரபுநாடுகள் அவர்கள் சேமித்த பணத்தில், ஆடம்பர வாழ்க்கை, // பிரம்மாண்ட மாளிகைகள் // தேவையற்ற சிலவுகள் பக்கம் அவர்கள் நாட்டத்தை திரும்பிவிட்டனர். இரான் நாட்டு அதிபர் ""ஷா ஆப் ஈரான்"" புரட்சியில் தூக்கி எறியப்பட்டதும் — உலக நாடுகளுக்கு வியப்பு –, குளியல் அரை, கழிப்பறை எல்லாம் தங்கத்தால் இருந்தது. அவர் ஒரு ஆடம்பர வாழ்க்கைக்கு தள்ளப்பட்டார். இதே நிலைதான் பெரும்பாலான அரபு நாடுகளுக்கும். இப்போது உலக நாடுகள் மாற்று எரிசக்திக்கு தள்ளப்படுகிறது. மேலும் பெட்ரோல் தேவை கட்டுக்குள் இருக்கும்.


இந்த நிலையில் அவர்களுக்குரிய தீவிரவாதத்தால், தற்போது துவங்கியுள்ள — அரபுநாடுகளே ஒருவருக்கு ஒருவர் தாங்கிக்கொள்ளும் நிலை வரும். நிர்பந்தம் காரணமான சௌதி அராபியா பாக்கிஸ்தானை ஆதரிக்க வேண்டிய நிலை வரும். இதனால் இந்த இரண்டு நாடுகளுமே வன்முறை, உலகநாடுகளின் மதிப்பை இழக்கும் நிலை உருவாகலாம்.

அமெரிக்க அதிபர் "கென்னடி" கம்யூனிஸ்ட் நாடான சைனா வளர விரும்பாமல் இந்தியாவை அணுசக்தி நாடாக ஒத்துழைப்பு தருவதாக கூறினார். ஐநாவின் பாதுகாப்புக்கு குழுவில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு வழிவகை செய்வதாக கூறினார். "நேரு" நாங்கள் அமைதியை விரும்புபவர்கள். எங்களுக்கு இது வேண்டாம் என்றார் . ஆசியா பகுதியில்,ஜப்பானை இரண்டாம் உலக மஹா யுத்தத்திற்குப் பிறகு பெரிய வல்லரசாக ஆக்காமல் ஒரு பொருளாதார சக்தியாக மட்டும் வைக்க உலக நாடுகள் விரும்பின. (ஐரோப்பா பகுதியில் ஜெர்மனியையும் ஒரு பொருளாதார சக்தியாக மட்டும் வளர்த்தனர்)

இந்த நிலையில் வேறு வழி இல்லாமல் சைனா முக்கியத்துவம் பெற்றது. அந்த நேரம் பார்த்து, கம்யூனிச சித்திதாந்தம் கொண்ட" மா சே துங்" – மரணமும் நிகழ்ந்தது. சைனாவும் பொருளாதார தாராளமயம் ஏற்றுக்கொண்டது. நாம் ஓட்டப்பந்தயத்தில் ""முயல்போல் தூங்கிவிட்டு, ஆமையை முன்னுக்கு அனுப்பிவிட்டோம்" நல்லவேளை தற்போது மோடி அரசு வந்ததும், மேற்கத்திய நாடுகள், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பானுக்கு கொண்டாட்டம், இந்த பகுதிக்கு ஒரு நல்ல துணைவேண்டும் என்று கூட்டாக இந்தியாவை முன்னேற ஒரு நிலையை உருவாக்கியுள்ளனர்.

இதை தொடர்ந்து நம் மக்கள் பயன் படுத்திக்கொண்டு, இதே அரசியல் சூழ்நிலை தொடர எண்ணவேண்டும்.

Leave a Reply