அமெரிக்க தலை நகர் வாஷிங்டனில் நடைபெற்ற அணுபாதுகாப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். அப்போது, ஜப்பானுக்கு வருமாறு மோடிக்கு அழைப்புவிடுத்த அபே, இருநாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் வாரணாசி நகரில் உருவாக்கப்படும் ஆலோசனை மையம் விரைவில் செயல் பாட்டுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாரணாசி நகருக்கு வந்திருந்த போது பிரதமர் மோடி அளித்த மிகப் பெரிய வரவேற்பையும், உபசரிப்பையும் எந்நாளும் மறக்கமுடியாது என குறிப்பிட்ட அபே, உலகளாவிய வகையில் பொது அச்சுறுத்தலாக திகழும் தீவிரவாதத்தை வேரறுப்பது தொடர் பாகவும் மோடியுடன் ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் நரேந்திரமோடியின் சிறப்பான தலைமையின்கீழ் சர்வதேச பொருளாதாரத்தின் உந்து சக்தியாக இந்தியா திகழ்வதாகவும் ஷின்ஸோ அபே அப்போது சுட்டிக்காட்டினார்.

Leave a Reply