பிரதமர் மோடி, அரசியலிலிருந்து ஓய்வு பெறும் போது, தானும் அரசியலில் இருந்து விலக வுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித் துள்ளார்.

புனேவில், நிகழ்ச்சி ஒன்றில்பேசிய அவரிடம் ஸ்மிருதி இரானி எப்போது பிரதமர் ஆவார் என்று கேள்வி எழுப்பப் பட்டது. இதற்கு பதில் அளித்தவர், தனக்கு பிரதமராகும் எண்ணம் இல்லை எனவும் சிறந்த தலைவர்களின் தலைமையின்கீழ் அரசியல்பணி செய்வதே தனது விருப்பம் எனவும் கூறினார்.

பிரமதர் நரேந்திர மோடி நீண்டகாலம் அரசியலில் இருப்பார் எனவும், அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெறும் போது, தானும் அரசியலிலிருந்து விலகி விடுவேன் என்றும் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

Leave a Reply