தனது சிறுவயதில் பிரதமர் மோடி டீ விற்ற வத்நகர் ரயில் நிலையத்தின் வளர்ச்சி பணிகளுக்காக எட்டுகோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி சிறுவயதில் தனது தந்தையின் டீ கடையில் பணியாற்றியது அனைவருக்கும் தெரிந்தவிஷயம் தான். வத்நகர் ரயில் நிலையத்தில் அந்த டீக்கடை அமைந்திருந்தது. மோடி பிரதமர் ஆகும்வரை சாதாரண கிராமமாக இருந்த வத்நகர் இப்போது 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு வெளிவட்ட சாலை, இன்னும் பிற வசதிகளுடன் அமர்களப்படுத்துகிறது. இந்நிலையில் வத்நகர் ரயில் நிலையத்தின் வளர்ச்சி பணிகளுக்காக எட்டுகோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் மனோஜ்சின்ஹா கூறுகையில், மெஹ்சனா மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகளுக்காக 100 கோடி ரூபாய் அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒருபகுதியாக வத்நகர் ரயில் நிலையத்தின் வளர்ச்சி பணிகளுக்காக எட்டுகோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது' எனக் கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply