நேற்று பிந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடிக்கு நாடு முழுவதும் இருந்தும் மற்றும் உலகதலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதில் குறிப்பாக இந்திய முக்கிய தொழில்அதிபர்களில் ஒருவரான அணில் அம்பானி மோடிக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு அவரது தந்தை, மோடி ஒருநாள் நிச்சயமாக நாட்டின் பிரதமராவார் என்று கூறியதை நினைவு கூர்ந்தார்.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராகுவதற்கு முன்னர் 1990 ஆண்டுகளில் ஒருமுறை தொழில் அதிபர் திருபாய் அம்பானி நரேந்திர மோடியை வீட்டுக்கு வரவழைத்திருந்தார். அப்போது நரேந்திரமோடி, திருபாய் அம்பானியிடம் நாட்டின் நலன் குறித்து பேசியபேச்சுக்களை வைத்தே, ஒருநாள் நிச்சயமாக நரேந்திர மோடி இந்திய நாட்டின் பிரதமாரக வருவார் என்று கூறினாராம். அது நடந்துவிட்டது.

எனது அப்பா சொர்க்கத்தில் இருந்து பிரதமர் மோடியை மகிழ்ச்சியுடன் வாழ்த்துவார் என்று அணில்அம்பானி தெரிவித்துள்ளார்.நரேந்திரமோடி குஜராத்தின் முதல்வராக ஆகுவதற்கு முன்பே திருபாய் அம்பானி நரேந்திரமோடி பிரதமராவார் என்று கூறியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தொழிலில் கொடிகட்டி பறந்த திருபாய் நாட்டின் அரசியல் களத்தையும் தீர ஆராய்ந்து வைத்திருந்து வைத்திருப்பார் போல..!!

Leave a Reply