நரேந்திர மோடி பிரதமாரானதை தான் அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லையென்று பிரபல ஹிந்தி நடிகை ரவீனா டாண்டன் அமீர் கானின் சகிப்பின்மை பேச்சுக்கு பதிலடிகொடுத்துள்ளார்.

அண்மையில் டெல்லியில் நடந்த விருதுவழங்கும் விழா ஒன்றில்,  நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து விட்டதால், நாட்டைவிட்டு வெளியேறுவது குறித்து தனது மனைவி கிரண் ஆலோசித்ததாக நடிகர் அமீர் கான் கருத்து வெளியிட்டிருந்தார்.

அமீர்கானின் இந்தகருத்துக்கு பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர், அனுபம்கெர் உள்ளிட்டோ கடும்கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அமீர் கானுடன் 'அந்தாஸ் அப்னா அப்னா' படத்தில் ஜோடியாக நடித்த ரவீனா  டாண்டனும் அவரது இந்தபேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ரவீனா டாண்டன், ''மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு  நடந்தபோது அமீருக்கு இந்த கவலை எழாதது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது . நவம்பர் 26 அன்று  நடந்த மும்பை தாக்குதல் சம்பவங்கள் அமீருக்கு இந்த கவலையை ஏன் அளிக்க வில்லை? இது முற்றிலும் அரசியல் உள்நோக்கமுள்ள  பேச்சு. புத்திசாலித் தனமற்றது. உண்மையை சொல்லப் போனால் அவர்களுக்கு நரேந்திர மோடி பிரதமரானதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால் அதனை நேரடியாக தெரிவிக்கும் துணிவும் அவர்களுக்கு இல்லை. அதனால் தான் தேசத்தை குறை கூறுகின்றனர். இந்ததேசம் என்ன செய்தது என்று கேட்கும் நீங்கள்,  அதற்குமுன், இந்த தேசத்துக்கு என்ன செய்தீர்கள்? என்ற கேள்வியை உங்களை பார்த்து கேட்டுக்கொள்ள வேண்டும்'' என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Leave a Reply