இந்தியப் பிரதமர் மோடி பிறந்தஇடமான வட்நகர் விரைவில் பொதுமக்கள் பார்வைக்காக அருங் காட்சியகமாக உருவாகவுள்ளது.

குஜராத்தின் வட்நகரில் பிறந்தவர் பிரதமர் நரேந்திரமோடி. இவரது பிறந்த ஊரினை அருங்காட்சியகமாக உருவாக்கி ஒருபுதிய சுற்றுலாத் தளமாக்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. அந்நகரில் மோடி டீவிற்ற ரயில்வே நிலையம், அவரது இல்லம் என அவரது நினைவுகளைத்தரும் அத்தனை இடங்களையும் ஒரேபேக்கேஜ் ஆகப் பார்வையிட குஜராத் சுற்றுலாத்துறை திட்டமிட்டு வருகிறது.

இதுகுறித்து குஜராத் சுற்றுலாத்துறை நிர்வாகிகள் கூறுகையில், இப்பொழுதே இந்தச்சுற்றுலா குறித்து பலரும் விபரம் கேட்டுவருவதால் எப்படியும் ஆண்டுக்கு 50,000 சுற்றுலாப் பயணிகள் வருவர்’ என எதிர்பார்க்கப் படுவதாகக் கூறினார்.

இந்தப் புதிய சுற்றுலா காலை 7 மணியளவில் துவங்கி இரவு 7 மணிவரையிலும் செயல்படும். மோடி பிறப்பிடம், வட்நகரின் முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய இடங்கள் என அத்தனையும் சேர்த்து பார்க்கும் இந்தப்புதிய பேக்கேஜ், நபர் ஒருவருக்கு ரூ.700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply