இந்த நாட்டில் உள்ள சாபக்கேடே தான் ஒழுங்காக இருக்க மாட்டான்.ஆனால் அடுத்தவனை நொட்டை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்அடுத்த வீட்டுகாரனுக்கு நல்ல தண்ணீர் குழாய் வர தன்னுடைய இடத்தில் ஒரு அடி இடம் கொடுக்க மாட்டான்.ஆனால் அவன் மணிக்கணக்கில் நதி நீர் இணைப்பை பற்றி பேசுவான்..

அடுத்த தெருவில் தண்ணீர் இல்லை என்று காலிக் குடங்களுடன் வரும் பெண்களுக்கு தங்கள் வீட்டில் குழாயில் தண்ணீர் பிடிக்கக்கூடாது என்று கூறிக்கொண்டு குழாயை எடுத்துக் கொண்டு போகும் கூட்டம் காவிரி பிரச்சனையில் மோடியின் துரோகம் என்று நடுரோட்டில் நின்று கத்திக்கொண்டு இருப்பார்கள்

இந்தியர்களின்கருப்பு பணம் சுவிஸ் வங்கிகளில் லட்சக் கணக்கான கோடிகளில் இருக்கிறது .இது என்ன நாடு
என்ன அரசாங்கம் இது என்று ஒப்பாரி வைத்து விட்டுவீட்டையும் பொருள்களையும் அரசாங்கத்தை ஏமாற்றி வரியை செலுத்தாமல் வாங்கிக்கொண்டு இருப்பார்கள்.

தன்னுடைய உழைப்பின் பலன் தனக்கும் தன்னுடையகுடும்பத்துக்கும் மட்டும் சேர வேண்டும்.அதில் ஒரு துளி
கூட அரசாங்கத்துக்கு செல்லக்கூடாது என்று இருக்கும்கூட்டம் அரசாங்கம் எனக்கு என்ன செய்தது என்று ஒப்பாரிவைத்துக்கொண்டு இருப்பார்கள்.
.
இந்தியாவின் பெரும் ஊழல் முதலைகள் எல்லாம் அர சாங்கத்தை ஏமாற்றி வெளி நாட்டு வங்கிகளில் கருப்பு
பணத்தை பதுக்க வைத்து 60 ஆண்டு காலம் வேடிக்கை பார்த்த காங்கிரஸ் கூட்டம் இரண்டு வருசங் களில் மோடியை பார்த்து கருப்பு பணம் என்னாச்சுஎன்று கேட்க மோடி போட்டார் பாரு குண்டு.

.முதலில் உன்கிட்ட இருக்கிறதை முதலில் வெளியில் எடு பிறகு வெளிநாடுகளில் இருப்பதை எடுப்போம்
என்று 5௦௦,1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கூறி விட்டார். இனி மேல் கருப்பு பணம் வச்சிருக்கிறவன்
எப்[படி அதை எடுத்துக்கொண்டு பேங்குக்கு போவான்? கணக்கு கேட்பார்களே..

இனிமேல் எவனாவது எப்பாவது கருப்பு பணத்தை பற்றி பேசுவீர்களா..கருப்பு பணம்ணா கருப்பா இருக்கும் அதனால் வீட்டில் இருக்கிற காந்தி நோட்டுக்களை எல் லாம் தீயில் போட்டு கொளுத்துங்கள்..இல்லை
என்றால் வருங்கால சந்ததிகள் விளையாட வைத்தி ருங்கள்..

நன்றி விஜயகுமார் அருணகிரி

Leave a Reply