தந்தி தொலைக்காட்சி செய்தியாளருக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருவருடத்திற்கு முன்பே.(2016 – ஜனவரி13) அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: "ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஒருஅறிவிக்கை வெளியிட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் மத்திய அரசால் எந்த ஒரு அவசர சட்டமும் கொண்டுவர முடியாது. ஆனால் மாநில அரசு தமக்குள்ள அதிகாரத்தைப் பயன் படுத்தி ஒரு அவசர சட்டத்தைக் கொண்டுவர முடியும். அப்படி தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டுவந்தால் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்."

ஒரு வருடத்திற்கு முன்பே.(2016 – ஜனவரி13) மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இப்படி சொன்ன நிலையில்..

ஒரு வருட காலத்தை வீணாகக் கடத்தி இந்த அளவிற்கு பெரும்பிரச்சினையாக உருவெடுக்கும் அளவிற்கு கொண்டுசென்ற தவறு யாருடையது?

மாநில அரசுடையதா?

மத்திய அரசுடையதா?

டிசம்பர் கடைசி வரை எந்த கேள்வியும் கேட்காமல் மாநில அரசை எந்தகேள்வியும் கேட்காமல் இருந்த ஊடகங்களுக்கும், மாநிலத்தில் உள்ள வலுவான எதிர் கட்சிகளுக்கும் இதில் பொறுப்பு இல்லையாம்..

 

மோடி மட்டுமே குற்றவாளியாம்..நாட்டாமைகளே..நல்ல இருக்குது உங்கதீர்ப்பு..          

Leave a Reply