இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில், மத்தியஅரசு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், உண்மையான பயனாளிகள் மட்டுமே பயனடைவதற்கு, அதிகவாய்ப்பு உருவாகியுள்ளது. இருப்பினும், 'ஆன்லைன்' பதிவேற்றம் செய்யும் பணியில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தை, மாநில அரசு உதவியுடன், மத்தியஅரசு செயல்படுத்தி வந்தது. அந்ததிட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, நடப்பாண்டில் இருந்து, 'பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம்' என, பெயர்மாற்றம் செய்துள்ளார். அதன் படி, காஞ்சி புரம் மாவட்டத்திற்கு, பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின்' கீழ், 11 ஆயிரத்து, 215 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


அதில், ஊராட்சி அளவில் மக்கள்தொகைக்கு ஏற்ப, குடியிருப்பு கட்டுவோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்திற்கு, புதிய வீடு கட்டுவோர் எந்தவடிவத்தில் வேண்டுமானாலும் வீட்டை கட்டிக்கொள்ளலாம். புதிதாக கட்டிய வீட்டிற்கு, நான்கு தவணையாக பயனாளிகளின் வங்கி கணக்கில், பணம் விடுவிக்கப்படும். வீடு கட்டுவதற்கு முந்தைய நிலைகுறித்து பயனாளிகள் புகைப்படம் எடுக்க தேவையில்லை என, கூறப்பட்டு வந்தது.இந்திராநினைவு குடியிருப்பு திட்டத்தில் இருந்து, பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில், முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தரப்பில்தெரிவித்தனர்.
திட்டத்தின் சிறப்பு அம்சம்!•    'பிரதம மந்திரி அவாஸ் யோஜானா திட்டத்தில்' பயனாளிகள் தேர்வு செய்வதற்கு, பயனாளிகள் வசிப்பிடத்தை புகைப்படம் எடுத்து, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவேண்டும்•    அதன் பின்னரே, வீடுகட்டும் பயனாளிகளுக்கு, பணி ஆணை என, அழைக்கப்படும்,

'ஒர்க் ஆடர்' ஆன்-லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து உரியபயனாளிக்கு வழங்கப்படும்•    வீடுகட்ட துவங்குவதற்கு முன், ஒருகுறிப்பிட்ட தொகையை, வீடு கட்டுவதற்கு தேர்வுசெய்த பயனாளிகளின் பெயரில், மத்திய அரசு பணம் விடுவித்திருக்கும்•    வீடுகட்டுவோருக்கு ஒவ்வொரு நிலையிலும்; புகைப்படம் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யவேண்டும். அப்போதுதான் கட்டுமான பணி நிலைக்கு ஏற்றவாறு பணம் விடுவிக்க ஏதுவாக இருக்கும்•    குறித்த அளவில் மட்டுமே வீடுகட்டுமானப்பணி அமைந்திருக்க வேண்டும். உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே, இந்ததிட்டத்தில் வீடு கட்டுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்•    அரசியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பயனாளிகளிடம் பணம்பெற முடியாது மற்றும் அவரின் பணத்தை எடுக்க முடியாது.


பயனாளிகள் பயன் பெறுவர்!பிரதம மந்திரி யோஜனா திட்டத்தின் கீழ், வீடு கட்டும் தகுதிஉடையவருக்கு மட்டுமே, வீடு கட்டுவதற்கு பயனாளியாக தேர்வுசெய்யப்படுகிறது. மேலும், அரசு வழங்கும் அறிவுரை படி, வீடுகட்டினால் மிகவும் எளிமையாக இருக்கும். அரசிடம் இருந்து எளிதாக பணம்பெறலாம். வீடுகட்டும் பணியும் தடையின்றி முடிக்கலாம்.-ஊரக வளர்ச்சி துறை அதிகாரி, காஞ்சிபுரம்

One response to “மோடி வீடு உண்மையான பயனாளிகள் மட்டுமே பயனடைவதற்கு, அதிக வாய்ப்பு”

Leave a Reply