ம.பி., மாநிலத்தில், ஐ.எஸ்., உளவாளிகள், 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 3,000 சிம்கார்டுகள், 50 மொபைல் போன்கள், 35 சிம்பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ம.பி., மாநிலத்தில், முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், மாநிலம்முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில், குவாலியரில், 5, போபாலில், 3, ஜபல்பூரில், 2 மற்றும் சத்னாவில் ஒருவன் என, ஐஎஸ்.,சுடன் தொடர்புடைய 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 3,000 சிம் கார்டுகள், 50 மொபைல்போன்கள், 35 சிம் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போலிபெயர் மற்றும் முகவரியில் துவங்கப்பட்ட நுாற்றுக்கணக்கான வங்கிகணக்குகள் குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன. இவர்களுக்கு தேவையான நிதி பாகிஸ்தானில் இருந்துவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply