சென்ற நூற்றாண்டுகளில் இந்திய அரசர்கள் நிறைய கோவில்களை கட்டினர். மக்கள் அதற்கு நிலங்களையும், நகைகளையும் மானியங்களாக வழங்கினர்.

ஆனால் இன்று கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி ஹிந்து கோயில்கள் மற்றும் அதன் சொத்துகளையும் அரசாங்கம் எடுத்துக்கொள்கிறது.

கோயில்களில் தவறு நடந்தால் அதை தட்டிக்கேட்பது மக்களின் கடமை. அரசாங்கம் ஏன் இதில் மூக்கை நுழைக்கவேண்டும்.

ஆந்திர அரசாங்கம் (பிரிபடாத ஆந்திரா) தன்னுடைய அறநிலையத் துறை சட்டத்தினால் 43000 கோயில்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. இந்த கோயில்களிலிருந்து வரும் வருமானத்தில் 18 % மட்டுமே கோயில் காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. மீது 82% வருமானம் இதர அரசு செலவினங்களுக்கு.

திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் மூலம் ஆந்திர அரசுக்கு ஆண்டொன்றுக்கு 3100 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதில் 85% அரசு கருவூலத்திற்கு அனுப்பப்படுகிறது. அரசாங்கம் இந்த வருமானத்தை ஆன்மீகம் அல்லாத இதர விஷயங்களுக்கு பயன்படுத்துகிறது. இதற்காகவா பக்தர்கள் தங்கள் கானிக்கைகளை கோயிலுக்கு அளிக்கிறார்கள்.

இது போக ஆந்திர அரசு 10 கோவில்களை இடித்து அந்த இடத்தில் கோல்ப் மைதானம் அமைக்தது. இதேபோல் அந்த அரசால் ஒரு மசூதியை இடிக்க முடியுமா?

கர்நாடக அரசாங்கம் தன் கட்டுப்பாட்டிலுள்ள 2 லட்சம் கோயில்களிலிருந்து 79 கோடி ரூபாய் வருமானத்தை எடுத்திருக்கிறது. இதற்கு பிரதி உபகாரமாக 7 கோடி ரூபாய்களை கோயில் பராமரிப்பு பணிகளுக்காக பயன்படுத்தியிருக்கிறது. அதே வேளையில், கர்நாடக அரசாங்கம் முஸ்லீம்களின் புனித யாத்திரையான ஹஜ்ஜுக்கு செல்ல 59 கோடி ரூபாய்களை வழங்கியிருக்கிறது. கிருத்தவர்களுக்கு சர்ச்சுகள் கட்ட 13 கோடி ரூபாய்களை கொடுத்திருக்கிறது.

கோயில் வருமானத்தை கோயில்களுக்கு பயன்படுத்தாததால், சுமார் 50000 கோவில்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன.

கேரள அரசாங்கம் குருவாயூர் கோயிலின் வருமானத்தை எடுத்து அரசாங்கத்தின் இதர செலவுகளுக்கு பயன்படுத்தியிருக்கிறது. ஆனால் பழமையான 45 கோவில்களை புணரமைக்க பணம் தர மறுத்திருக்கிறது. சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான நிலங்களை சர்ச்சுகள் ஆட்டையைப் போடுகின்றன. அரசாங்கம் அதைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. இது போக, கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் திருவாங்கூர் தேவஸ்தானத்தின் குழுவை கலைத்து விட்டு, தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 1800 கோயில்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறது.

இந்த மாநிலங்களைப் பார்த்து மகாராஷ்டிரா மாநிலமும் (காங்கிரஸ் ஆட்சியில்) தன் கட்டுப்பாட்டில் இருக்கும் 4,50,000 கோவில்களையும், அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் எடுக்க முயன்றது. இதன் மூலம் திவாலான தன் அரசு கஜானாவை நிரப்ப முயற்சித்தது.

இவையெல்லாம் என்ன பெருசு என்று சொல்லும் வகையில், ஒரிசா அரசாங்கம் புரி ஜகன்நாதர் ஆலயத்திற்கு சொந்தமான 70,000 ஏக்கர் நிலங்களை விற்க ஏற்பாடு செய்து வருகிறது. அதில் வரும் வருவாயின் மூலம் நலிவுற்ற கோவில்களை சீரமைக்கப்போகிறதாம். கோவில்களை முதலில் நலிவடையச் செய்யவேண்டும். பின்னர் அந்த கோவில்களை சீரமைக்க கோயில் நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்கவேண்டும். நல்ல யுக்தியாக இருக்கிறதே!

இந்த செய்திகளை எல்லாம் எந்த ஊடகமும் வெளியிடவில்லை. வெளியிடவும் செய்யாது. ஏனென்றால் இந்தியாவில் செயல்படும் பெரும்பான்மையான ஊடகங்கள் ஹிந்து விரோத ஊடகங்கள். எனவே ஹிந்துக்களை பாதிக்கும் எந்த செய்திகளையும் அவர்கள் வெளியிடமாட்டார்கள். இதனால் கோடிக்கணக்கான ஹிந்துக்களுக்கு தாங்கள் தங்கள் அரசால் ஏமாற்றப்படுகிறோம் என்பதே தெரிவதில்லை. ஜனநாயக நாடு, சுதந்திர நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் ஹிந்து மத சுதந்திரம் அறவே கிடையாது. சிறுபான்மையின மதத்திற்கு சாதகமாகவும், பெரும்பான்மையான மதத்திற்கு பாதகமாகவும் செயல்படும் நாடு எப்படி மத சார்பின்மை நாடாக இருக்கும்.

இந்த அரசாங்களுக்கு நன்கு தெரியும் – ஹிந்து கோவில்கள் மூலம் கொள்ளை வருமானம் கிடைக்குமென்று; கோவில்களை சூறையாடப்படுவதைப் பற்றி ஹிந்துக்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டார்கள்; ஹிந்துக்களுக்கு சகிப்புத் தன்மை அதிகமென்று; ஹிந்துக்கள் தெருக்களில் இறங்கி போராடமாட்டார்கள், வன்முறையில் இறங்க மாட்டார்களென்று.

பல ஹிந்துக்கள் தங்கள் கலாச்சாரம் தங்கள் கண் முன்னே அழிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஹிந்துக்கள் இந்த அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுக்கவேண்டும். அவர்கள் போராடினால் கம்யூனிஸ்டுகள் அவர்களை மட்டம் தட்டுவார்கள். ஒருவரிடம் திருடி மற்றவரிடம் கொடுப்பது ஒரு அரசின் சிறந்த சேவையாகாது. கோவில்கள் கொள்ளை அடிக்கப்படுவதற்காக இல்லை. முகமது கஜினியின் காலம் இன்னும் முடியவில்லை போலும்.

இதை எழுதியவர் ஹிந்து மதத்தின் மேல் அபிமானம் கொண்ட ஒரு வெளிநாட்டவர் – ஸ்டீஃபன் நேப்

Comments are closed.