இன்றைய அரசியல் பாஜக வை சுற்றிதான் நடந்துக் கொண்டிருக்கிறது! மக்களெல்லாம் பாஜக வை ஆதரித்துக்கொண்டிருக்கிறார்கள்! எதிர்கட்சிகள் எல்லாம் பாஜக வை தோக்கடிப்பது எப்படி என சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்! எங்கு போனாலும் பாஜக தான் பேச்சாக இருக்கிறது!

 

ஏற்கெனவே அதிமுக பாஜகவோடு கூட்டணி அமைக்க முயன்றுக்கொண்டிருக்கிறது! இப்போது திமுக வும் முயலுகிறது!. காரணம் எங்கு பார்த்தாலும் பாஜகதான் பேச்சாக இருப்பதுதான் காரணம்!

 

”என்னுடைய ஆட்சியில் கமிஷனே இல்லை“ என்று மார்தட்டி பேசுகிறார் பிரதமர்! அனைவருக்கும் சொந்த வீடு கட்டித்தருவதுதான் என் லட்சியம் என்கிறார் பிரதமர்! ஒரு லட்சம் வீடுகளை குஜராத் மாநிலத்தில் வழங்கிய பிரதமர், பகிரங்கமாக பயனாளியிடம் கேட்கிறார்! உங்களுக்கு வீடு தர யாருக்காவது கமிஷன் கொடுத்தீர்களா? என்று! இல்லவே இல்லை! என்று பயனாளிகள் சொன்னார்கள்! எவ்வளவு வெளிப்படையான அரசு பாருங்கள்!

 

இந்திய அரசியல் வரலாற்றில், நாங்கள் ஊழல் செய்யவில்லை என்று பலரும் சொல்வார்கள், ஆனால் யாரையும் ஊழல் செய்ய விடலாட்டோம் என்று சொல்லும் ஒரே கட்சி பாஜகதான்!. பிரதமர் நரேந்திரமோடி ஊழலுக்கு எதிரானவர்! கள்ளப் பணம் கருப்புப் பணத்தை அழித்தொழிப்பவர் நரேந்திரமோடி! G.S.T மூலம் கள்ளவியாபாரம் கடத்தல் வியாபாரத்தை ஒழித்தவர் மோடி!

 

உண்மையில் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட எந்த அரசியல்வாதியும் மோடியை ஆதரிக்க மாட்டான்!. அந்த அடிப்படையில் திமுக.,வும் அதிமுக.,வும் பாஜகவை கண்டிப்பாக ஆதரிக்க மாட்டார்கள்! காரணம் அதற்கெல்லாம் (ஊழலுக்கெல்லாம்) பாஜக சரிப்பட்டு வராது!

 

ஆனால் பாஜகவைத்தான் மக்கள் ஆதரிக்கிறார்கள், என்னும் உண்மை திமுக அதிமுக வுக்கு புரிந்துவிட்டதால், பாஜகவை எதிர்த்து தேர்தலை சந்தித்தால் மக்கள் ஆதரவு கிடைக்காது என்று திமுக அதிமுக நினைப்பதால், இப்போது திமுகவும் அதிமுகவும் பாஜகவோடு கூட்டணிவைக்க துடிக்கிறார்கள்!

 

இது பாஜகவின் அரசியலுக்கு கிடைத்திருக்கும் வெற்றியாகும்! ஒரு காலத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று நம்மை சொன்னார்கள், காலூன்ற விடமாட்டோம் என்று சொன்னார்கள், இப்போது வந்து மண்டியிடுகிறார்கள்! இதற்கெல்லாம் மக்களிடம் நமக்கிருக்கும் ஆதரவுதான் காரணம்! பாஜகவின் வளர்ச்சிதான் இந்த மாற்றத்திற்கு காரணம்!

 

நம்மோடு கூட்டணி வைக்க யோசிக்கவேண்டியது அவர்கள்தான்! நாமல்ல!. பல கட்சிகள் நம்மோடு கூட்டணிவைக்க போட்டி போடுகிறார்கள் என்றால் நாம் தமிழக அரசியலை வென்று விட்டோம் என்பதுதான் பொருள்!

 

திமுக அதிமுகவோடு நாம் கூட்டணி வைத்தால், அவர்களின் கொள்கைக்கு நாம் மாறமாட்டோம், அவர்கள் தான் நம் வழிக்கு வருகிறார்கள் என்பதுதான் கூட்டணியின் பொருளாகும்! நம் வழியில் பலரும் வந்தால் அது நமது வெற்றிதானே! ஏற்கெனவே நாம் திமுகவோடும் அதிமுகவோடும் கூட்டணி வைத்திருந்தோம்! அப்போதெல்லாம் நமது கொள்கையை நாம் விட்டுவிட்டோமா என்ன?

 

நம்மோடு சேருகிறவர்கள், நம்மைப்போல்தான் மாறுவார்கள்! யார் வேண்டுமானாலும் வந்து சேரட்டுமே! நாம் நமது கொள்கையில் உறுதியாக இருக்கவேண்டும்! ஊழலை ஒழிப்பதும், இந்திய கலாச்சாரத்தை பாதுகாப்பதும் நமது கொள்கை! இந்த கொள்கையை ஏற்று மதவாத அமைப்பான முஸ்லீம் லீக் கூட்டணிக்கு வந்தாலும் நாம் ஏற்கத்தான் செய்வோம்!

 

ஊழலை ஒழிக்கும் கொள்கை உடைய நம்மோடே ஊழல்வாதிகள் வந்து சேருகிறார்கள் என்றால், அவர்களுக்கு வேறு வழி இல்லை! நமக்கிருக்கும் மக்கள் செல்வாக்குதான் அவர்களை நம்பக்கம் இழுக்கிறது என்றுதான் பொருள்!

 

நாம் திமுகவோடோ அதிமுகவோடோ கூட்டணி வைத்தால், நாம் ஊழலை ஆதரிக்கிறோம் என்பதல்ல பொருள்! அவர்கள் ஊழலை விட்டு இப்போது நம்மை ஆதரிக்கிறார்கள் என்பதுதான் பொருள்! நம்மோடு கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தால் யாரும் ஊழல் செய்ய முடியாது!

 

திமுகவும் அதிமுகவும் தனி நபர்களை நம்பி அவர்களின் வழியில் செயல்பட்ட கட்சிகள். இப்போது அந்த தனி நபர்கள் இல்லை! எனவே அதன் தொண்டர்கள் இப்போது மோடியை விரும்புகிறார்கள்!  எனவேதான், தொண்டர்களை தொடர்ந்து அந்த கட்சிகளின் தலைவர்களும் நம்மை விரும்புகிறார்கள்!

 

எனவே திமுக அல்லது அதிமுகவோடு, அல்லது இரண்டு கட்சிகளின் கூறுகளோடு கூட்டணி என்பது பாஜகவின் வளர்ச்சி திட்டமாகும்!

 

தமிழகத்தில் நாளைய ஆட்சி பாஜகவுக்கு சொந்தமானது என்பதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை!

 

–    குமரிகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published.