இலங்கையில் யுத்தத்திற்கு பின்னர் நல்லிணக்கத்தை உருவாக்க இலங்கை அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

தமிழர்கள் அதிகம்வாழும் யாழ்ப் பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையிலேயே பிரதமரின் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

நீண்டகாலமாகத் தொடர்ந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட தமிழர் பிரதேசமான யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தால் வீடுகளை இழந்து நிர்க்கதியாக்கப் பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட 27 ஆயிரம் வீடுகளை வழங்கினர் .

அப்போது பேசிய மோடி போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் துயர் துடைக்க இந்தியா உதவும் . வீடு இழந்த தமிழர்களுக்கு 2வது கட்டமாக மேலும் 45 ஆயிரம் வீடுகளை கட்டித்தர இந்தியா உதவும் என்று மோடி தெரிவித்தார்.

Leave a Reply