காஷ்மீரில் யூரி பகுதியில் பணி முடிந்து தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த ராணுவ வீரர்கள் மீது அதிகாலையில்  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந் தனர். 23 பேர் காயமடைந்தனர். இதனால் கடுங்கோப மடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 'பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் வகையில், ஐ.நா., சபை பொதுக்கூட்டம் உட்பட, சர்வதேச அரங்கில், அதன் முகத்திரையை கிழிக்கும் விதமாக, ஆதாரங்களை முன் வைக்க எத்தனித்துள்ளார்.

ராணுவ முகாம்மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில், பாகிஸ்தானின் சின்னம், முத்திரை உள்ளன; ராணுவம் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டன. உணர்ச்சிவசப்படாமல், கோபப்படாமல்; அதேநேரத்தில், பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்ற ரீதியில் சிந்திக்கப்படுகிறது .

அதன்படி, சர்வதேச அளவில், பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதுதான் மிகச் சிறந்த உடனடி நடவடிக்கை .'பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் வகையில், ஐ.நா., சபை பொதுக் கூட்டம் உட்பட, பல்வேறு சர்வதேச அமைப்புகளில், அதற்கான ஆதாரங்களை தாக்கல்செய்ய வேண்டும்'.  போதிய ஆதாரங்களை திரட்டிய பின், அதுபற்றிய நடவடிக்கைகள் மேலும் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:

Leave a Reply