மிகவும் பழமையான இந்த யோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம், என அனைத்தையும் கடந்து அனைவருக்குமான ஒரு கலை.

யோகா என்பது ஒழுக்கம். உங்களின் வாழ் நாள் முழுவதும் அதை நீங்கள் பின்பற்ற வேண்டும். இக்கலை காலம்காலமாக ஒருவர் கையில் இருந்து மற்றொருவர் கைக்கும் ஆரோக்கியத்தின் தேவையை வலியுறுத்தி கடத்தப் பட்டுக் கொண்டேவருகிறது.

இந்தகலை ஏழைகள் மற்றும் பழங்குடிகள் அனைவரையும் சேரவேண்டும். ஏன் என்றால் அவர்கள்தான் உடல் நலக் குறைவால் அதிகம் பாதிப்படைகிறார்கள்.

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம் யோகா ஆயுள் முழுவதும் கைகொடுக்கும். நம் அன்றாட வாழ்வின் அங்கமாக யோகா மாறிவருகிறது. யோகா அனைவருக்குமானது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இதயம் தொடர்பான நோய்களை யோகா தடுக்கும். உலகுக்கு இந்தியா அளித்த மிகப் பெரிய கொடை யோகா. ஏழை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாற்ற விரும்புகிறோம்.

உலக யோகா தினத்தில்

பிரதமர் நரேந்திர மோடி பேசியது

Comments are closed.