உ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத் மீது கோரக் பூரிலுள்ள கோரக்நாத் கோவிலில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவது குறித்து உளவுப் பிரிவு, காவல் துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உளவுத் துறை தகவல்களின்படி, பத்திரிகையாளர் என்ற போர்வையில் பயங்கரவாதி இக்கோயிலுக்குள் நுழைவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, கோரக்நாத் கோயிலின் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

கோரக்பூர் காவல் துறையினர் உள்ளூர் பத்திரிகையாளர்களின் நற்சான்றிதழ்களை முறையாக ஆராய்ந்த பின்னர், புதியபுகைப்பட அடையாள அட்டைகளை தயாரிக்குமாறு கேட்டு கொண்டனர்.

லக்னோவில், யோகி ஆதித்யநாத் பாதுகாப்பு நலன்கருதி, பத்திரிகையாளர் களிடமிருந்து சற்று இடைவெளியில் இருப்பார். ஆனால் கோரக்பூரிலுள்ள ஊடகங்கள் அவரை எளிதில் அணுகமுடியும். அவர் கோரக்பூர் பயணத்தில் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ‘ஜனதா தர்பாரில்’ உள்ளூர் மக்களையும் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.