ரஃபேல் ஒப்பந்தத்தை பெறவேண்டுமானால்   ரிலையன்ஸ் நிறுவனத்தை   இந்திய பங்குதாரராக  தேர்வு செய்யவேண்டியது கட்டாயம் என  டஸால்ட் நிறுவன ஆவணங்களில் உள்ளது!.

மீடியாபார்ட்  பிரான்ஸ் ( இணையதள) பத்திரிகை!
  
இந்த தகவலை படிக்கும் போது ரஃபேல்  ஒப்பந்தத்தைப் பெறவேண்டும் என்றால்  ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக  இணைத்துக் கொண்டாக வேண்டும் என  மோடி அரசு கட்டாயப்படுத்தி இருக்கிறது  என்ற எண்ணமே உண்டாகும்!
 
ஆனால்  உண்மை அதுவல்ல!  கௌரவமாக சொன்னால்   இது தவறான தகவல்!  பச்சையாக சொன்னால்  பொய்யான விஷமப் பிரச்சாரம்!
 
உண்மை என்னவென்றால்  ரஃபேல் நிறுவனம் போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்கிறது!  அந்த விற்பனை மூலம் கிடைக்கக் கூடிய  தொகையில் 50 சதவீத தொகைக்கு  Make in India திட்டத்தின் கீழ் அந்த நிறுவன   உற்பத்திக்கு இந்தியாவில்   முதலீடு செய்ய வேண்டும்! அதற்கு இந்தியாவில் தொழிற்சாலை  நிறுவ வேண்டும்!
 
அப்படி செய்தால்   பிரான்ஸ் நாட்டினருக்கு கிடைக்கவேண்டிய  வேலை வாய்ப்பில் இழப்பு ஏற்படுகிறது!  அதைப் பற்றி தொழிற்சங்கத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்பது அந்த நாட்டின் சட்டம்!
 
இந்த சூழ்நிலை எதனால் ஏற்பட்டது;  ஏன் தவிர்க்க முடியாது என்பதை  தொழிற்சங்க அமைப்புக்கு தெரிவிக்க   விளக்க வேண்டும்!  அந்த சட்டவிதிகளின் படி   இந்தியா- பிரான்ஸ் இடையிலான ரஃபேல் போர் விமான ஒப்பந்தப்படி  50 சதவீத தொகையை இந்தியாவில்  முதலீடு செய்து உற்பத்தி செய்ய வேண்டும்  என்ற ஷரத்து இருந்தது ; அந்த ஷரத்தை  ஏற்க மறுத்தால் இந்தியா ரஃபேல் விமானங்களை வாங்காது!  அப்படி வாங்கவில்லை என்றால்  பிரான்ஸில் உள்ள ரஃபேல் தொழிற்சாலைக்கு  கிடைக்கும் உற்பத்தி வாய்ப்பு கிடைக்காது!.


அதன் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்கும்  வேலைவாய்ப்பு கிடைக்காது!எனவே  இந்தியாவில் உற்பத்தி செய்வதை தவிர்க்க  முடியாது என்பதை தொழிற்சங்க அமைப்புக்கு என்று டஸால்ட் நிறுவனம் தெரிவித்தது!
 
  அதற்கு அத்தாட்சியாக ஒப்பந்தப் பிரிவின்  நகலையும் இணைத்து அனுப்பி இருக்கிறது!  இதில் எந்த இந்திய நிறுவனத்துடன் டஸால்ட்  நிறுவனம் இணைந்து செயல்படுகிறது என்பது  தொழிற்சங்க அமைப்பின் அக்கறை இல்லை!
 
  டஸால்ட்- தொழிற்சங்க அமைப்பு இடையிலான  இந்த தகவலை தான் மீடியாபார்ட்   செய்தி ஆக்கி இருக்கிறது!
 
 
  ( டஸால்ட் நிறுவனம் இந்தியாவில் போர்  விமானங்களை தயாரிக்கப் போவதில்லை!  வர்த்தக விமானங்களுக்குக்கான பாகங்களை   தயாரிக்கப் போகிறது! அதற்கு 70 க்கும்  அதிகமான இந்திய நிறுவனங்களுடன்   ஒப்பந்தம் செய்து இருக்கிறது! அதற்கு  ரிலையன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து டஸால்ட்ரிலையன் என்ற பெயரில்  ஒரு நிறுவனத்தை துவக்கி இருக்கிறது!)
 
மீடியாபார்ட் இணைய தள இதழ்  இந்திய அரசியல் கட்சி ஒன்றின்   பிரச்சாரத்திற்காக வேலை செய்கிறது என்று  தெளிவாக தெரிகிறது! அந்த அரசியல் கட்சி  எது என்பது ஊரறிந்த ரகசியம் தான்!

நன்றி வசந்தன் பெருமாள்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.