கேரளத்தில் அதிகரித்துவரும் அரசியல் கொலைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்தமாநில அரசுக்கும், போலீஸாருக்கும் தேசியமனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரளத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக தொண்டர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தை தேசியமனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்தது.

இந்நிலையில், இதுகுறித்து 4 வாரத்துக்குள் விளக்கம் அளிக்கக்கோரி கேரள அரசுக்கும், மாநில அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கும் தேசியமனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:


இத்தகைய அரசியல் கொலைகளை தவிர்ப்பதற்காக, மாநிலஅரசு எடுத்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கவேண்டும்.

இதனால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசின்சார்பில் ஏதேனும் நிவாரணம் வழங்கப்பட்டதா என்பது குறித்து தலைமைச் செயலாளர் விளக்கமளிக்கவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த விவகாரம்தொடர்பாக தேசிய மனிதஉரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடிமக்களின் உயிரைக்காக்கும் கடமை மாநில அரசுக்கு உண்டு' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply