திராவிடர் கழகத்துடனான தொடர்பை தி.மு.க இத்துடன் துண்டித்துக் கொள்ள வேண்டும் ,  இல்லை என்றால் கடுமையாக விளைவுகளை சந்திக்கநேரிடும் என பாஜகவின் தேசிய செயலாளர்களின் ஒருவரான எச். ராஜ  திமுகவை எச்சரித்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசியசெயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா, நடிகர்  ரஜினி காந்தை சீண்டியதால் திக -வின் அத்தனை அட்டூழியங்களும் வெளி வந்து கொண்டிருக்கிறது  என கூறியுள்ளார். தொடர்ந்து பேசியுள்ள அவர்,

திராவிடர் கழகத்துடன் உள்ள தொடர்பை திமுக உடனே துண்டித்துக்கொள்ள வேண்டும்.  இல்லை என்றால் மிகப்பெரிய விளைவுகளை  திமுக சந்திக்கநேரிடும் .  ரஜினியால்  திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது ரஜினியின் பேச்சை  நான்  வரவேற்கின்றேன், அரசியல் நாகரிகம் ,  பண்பாடுபற்றி திராவிடர் கழகத்த தலைவர்  கி. வீரமணி ரஜினிகாந்திற்கு பாடம்  எடுக்கலாமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.