'சர்ஜிக்கல் தாக்குதலுக்கான காரணம், எதற்காக நடத்தப்பட்டது என்பதற்கான, வீடியோ ஆதாரங்களுடன், நாட்டில், 32 நகரங்களில் உள்ள பொதுமக்களுக்கு எடுத்து சொல்லப்படுகிறது. கடந்த, 2016ல், சர்ஜிகல் தாக்குதல் நடத்த வேண்டிய நிலை, ஏன் ஏற்பட்டது? போர் இல்லாத சூழ்நிலையில், நாட்டின் ராணுவ முகாமில் புகுந்து, துாங்கிக்கொண்டிருந்த, 16 வீரர்களை, பயங்கரவாதிகள் கொன்றனர்.


அண்டை நாட்டின் ஆதரவு இல்லாமல், இந்தியாவுக்குள் பயங்கர வாதிகள் வந்திருக்க முடியாது என்பது, அனைவருக்கும் தெரியும். அவர்களிடம், 'பயங்கர வாதிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டாம்; இடமளிக்க வேண்டாம்' என, கூறியுள்ளோம். இருப்பினும், அந்த நாட்டு அரசு, அதை நிறுத்தவில்லை. மும்பை தாக்குதல் நடந்தபிறகும், அந்த நாடு, யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான், இந்திய ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க,

 

சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பயங்கரவாதிகளின் பயிற்சிதளங்கள் அழிக்கப்பட்டன. 'பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும், அண்டை நாட்டின் போக்கிற்கு, இந்தமுறையிலும் பதிலடி கொடுக்க முடியும்' என, சர்ஜிக்கல் தாக்குதல் மூலம் காட்டப்பட்டது. எல்லையில், பயங்கரவாதிகள் ஊடுருவல் நடக்கிறது.அவர்களில் ஏராளமானோர், அங்கேயே சுட்டு கொல்லப் படுகின்றனர்.


'ரபேல்' போர் விமானம் ஒப்பந்தம் குறித்து, பார்லிமென்டில், நான்கு முறை விளக்கம் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தமே பின்பற்றப் படுகிறது. ரபேல் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்தது, காங்கிரஸ் அரசுதான். 'இந்த ஒப்பந்தத்தில், அரசு நிறுவனத்துடன் அல்லது தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயல்படலாம்' என மாற்றியது, காங்கிரஸ்அரசே.

இந்த ஒப்பந்தம் குறித்து, காங்கிரஸ்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.ரபேல் ஒப்பந்தத்திற்கு, 17 நிறுவனங்கள் போட்டியிட்டன. பிரான்ஸ் முன்னாள் அதிபர், 'நாங்கள் வேறு நிறுவனங்களை பரிந்துரை செய்ய வில்லை' என, கூறுவது தவறு. இதில், எச்.ஏ.எல்., நிறுவனம் மீது, காங்கிரசுக்கு திடீர் காதல் வந்துள்ளது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், ஒவ்வொரு ஆண்டும், எச்.ஏ.எல்., நிறுவனத்திற்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், பணிஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. காங்., ஆட்சியில், 10 ஆண்டுகளில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மட்டுமே,பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் ஏன், ரபேல் ஒப்பந்தத்தை, அந்நிறுவனத்திற்கு வழங்க வில்லை? அதேபோல, எச்.ஏ.,எல்., நிறுவனம், 'டார்னியர்' என்ற, விமானத்தை உருவாக்குகிறது. அதிலும், தொழில்நுட்ப பரிமாற்றம் இல்லை. எச்.ஏ.எல்.,மீது அக்கறை இருந்திருந்தால், 'டார்னியர் யூனிட்'டையும் வாழ வைத்திருக்கலாம்; அதை செய்யவில்லை.

 


'எல்.சி.ஏ., ஏர்கிராப்ட்' ரக விமானங்கைள, எச்ஏஎல்., நிறுவனம் உருவாக்குகிறது. இதை, 'தேஜஸ்' என, அழைக்கிறோம். 2010க்குள், 40 தேஜஸ் விமானத்திற்கு, 'ஆர்டர்' கொடுக்கப் பட்டது. இன்று வரை, எட்டு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், உற்பத்தி திறனைவளர்க்க வேண்டும். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதை, நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன்

Leave a Reply

Your email address will not be published.