ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதைமறுத்து வரும் பா.ஜனதா, இந்த ஒப்பந்தத்தில் என்ன நடந்தது என்பதை இந்திநடிகை பல்லவி ஜோஷியை வைத்து விளக்கம் அளித்துள்ளது.

பல்லவி ஜோஷி நடித்து, 2.19 நிமிட நேரம் ஓடும்வீடியோ படத்தை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு நேற்று வெளியிட்டது.

அதில், “மலிவான விலையில் போர் விமானங்கள் வாங்குவதே ரபேல் ஒப்பந்தத்தின் நோக்கம். இதுபோல், ஏவுகணைகளையும் வாங்குவோம். அவற்றின் உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு ரூ.12 ஆயிரத்து 500 கோடி மிச்சம் ஆகியுள்ளது என்பதுதான் மிகவும் முக்கியமான விஷயம்” என்று பல்லவி ஜோஷி கூறுகிறார்.

Leave a Reply