மத்திய அமைச் சரவைக் கூட்டம் தில்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் பல இடங்களுக்கு ரயில்பாதைகளை அமைக்க வேண்டியிருப்பது, அதற்காக பெரு மளவில் நிதி திரட்டவேண்டியது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, ரயில்வேதுறை, மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கபட்டது. இதன்மூலம் ரயில்வேயும், மாநில அரசுகளும் இணைந்து கூட்டாண்மை நிறுவனத்தை ஏற்படுத்தி, அந்தந்த மாநிலங்களில் ரயில்வே திட்டங்களை நிறை வேற்ற முடியும்.

செயல் படுத்தப்படும் திட்டங்களை பொறுத்து, குறைந்தபட்ச தொடக்கமுதலீடு ரூ.100 கோடியாக இருக்கும். இதில் ரயில்வேயும், மாநில அரசும் சரிபாதியாக முதலீட்டை பங்கிட்டுவழங்கும். மாநில அரசுகளிடம் இருந்து முதலீட்டை பெறுவது மட்டுமல்லாது, திட்டங்கள்தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரமும் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும். ரயில்வே திட்டங்களில் மாநிலஅரசும் பங்கெடுப்பதால், ஒப்புதல்கள் கிடைப்பது, நிலம் கையகப் படுத்துதல் போன்ற பணிகள் எளிதாகும்.

இதனால் ரயில்பாதை அமைக்கும் பணிகளும் விரைவில் நடைபெறும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ரயில்வே பட்ஜெட்டின்போதே இதுதொடர்பான அறிவிப்பு வெளியானது. அண்மையில் கேரளம், ஆந்திர அரசுகளுடன் ரயில்வேதுறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த இரு மாநிலங்களிலும் ரயில்வே திட்டங்களை விரைந்துமுடிக்க ரயில்வே துறையும், மாநில அரசுகளும் இணைந்து கூட்டாண்மை நிறுவனங்களை உருவாக்க இந்த ஒப்பந்தங்கள் வழிவகைசெய்தன. அதற்கு முன், மகாராஷ்டிர அரசும் ரயில்வே துறையுடன் இதேபோன்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply