2016-2017 ரயில்வேபட்ஜெட் பயணிகள் நலன்சார்ந்த பட்ஜெட்டாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

இந்த பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது , "2016-2017 ரயில்வே பட்ஜெட், கட்டண உயர்வு இல்லாததால் பயணிகள் நலன்சார்ந்த பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

ஏழைகள் மீது மத்திய அரசு கொண்டுள்ள அக்க றையின் வெளிப்பாடே முன் பதிவு செய்யாத பயணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள அந்தோதயா அதி விரைவு எக்ஸ்பிரஸ் ரயில்சேவையும், தீனதயாள் ரயில்பெட்டிகள் சேவையும்.

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ரயில்வேபட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும். உட்கட்டுமான மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியனவற்றை உறுதிசெய்வதாக இருப்பதால் இந்தபட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் ஏற்புடையதாக அமைந்துள்ளது.

மணிப்பூர், மிசோரம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ரயில்சேவை மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply