செங்கோட்டையில் விநாயகர் சிலையை சேதப் படுத்தியவர்களை விட்டுவிட்டு பா.ஜ.க.வினர் கைது செய்யப்படுவதை கண்டித்து வருகிற 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தாமிரபரணி புஷ்கரணிவிழா சுமுகமாக நடைபெற அரசு அனைத்து ஆயத்த பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி நெல்லையில் உண்ணாவிரதம் நடக்கிறது.

அரசியல் தலைவர்களை கைதுசெய்வதில் அரசு ஒரு தலைபட்சமாக செயல்படுகிறதா? என்பதை காவல்துறையிடம் தான் கேட்கவேண்டும். சர்ச்சைக்குரிய பேச்சில் இடம்பெற்றுள்ள குரல் தன்னுடையது அல்ல என்று எச்.ராஜா கூறியுள்ளார். கோர்ட்டில் வழக்காடி உண்மை இருக்கும்பட்சத்தில் அவர் வெளியே வருவார்.

பெட்ரோல், டீசல் விலை நிச்சயமாக குறைக்கப் படும். பஸ் கட்டணத்தை உயர்த்த முயற்சி செய்வதை விட பெட்ரோலுக்கான வாட் வரியை குறைக்க தமிழக அரசு முயற்சிசெய்யலாம். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர ஆதரவு தரலாம். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்கிறது.

ரபேல் விமான விவகாரம் பற்றி மத்தியமந்திரிகள் தெளிவாக விளக்கம் அளித்து விட்டனர். பிரதமர் மோடி அரசில் ஒரு சதவீதம்கூட ஊழலுக்கு இடம் இல்லை. போபர்ஸ் ஊழல் பற்றி மக்கள் மறக்காததால் ராகுல்காந்தி எதையாவது சொல்லி கொண்டு இருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியது:-

Leave a Reply