காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி அணிந்துள்ள இத்தாலிய கண்ணாடி காரணமாக அவரால் நாட்டில் ஏற்பட்டுவரும் எந்தவித மாற்றத்தையும் காணமுடியாது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதும், இந்தியாபாகிஸ்தான் எல்லையில் நிலவும்சூழல் மாறியுள்ளது. ஆனால், ராகுல் காந்தியோ எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறுகிறார். இத்தாலியக் கண்ணாடியை அவர் அணிந்திருப்பதால், அவரால் மாற்றத்தைக் காணமுடியாது.


பிரதமர் மோடி தலைமையிலான கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் என்ன சாதனை நிகழ்ந்துள்ளது? என்று சில நாள்களுக்கு முன்பு ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்சியின் மதிப்பெண் அறிக்கையை (சாதனைப் பட்டியலை) நான் வைத்திருக்கிறேன். ஆனால், அதுநீண்டதாக இருப்பதால் ராகுலிடம் காண்பிக்க இயலாது. பாஜக அரசின் மீது யாரும் ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பமுடியவில்லை என்பதே எங்களது மிகப்பெரிய சாதனையாகும்.காங்கிரஸ் தலைமையிலான முந்தைய 10 ஆண்டுகால ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு ஊழல்கள் நடைபெற்றதை மக்கள் இன்னமும் நினைவில் வைத்துள்ளனர். அந்தப்பணம் என்னவானது என்று மக்கள் ராகுலைப் பார்த்து கேட்கின்றனர்.


குஜராத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துள்ளது. அதன் 40 ஆண்டுகால ஆட்சியில் 24 மணி நேர மின்சாரத்தையும், குடிநீரையும் வழங்கவில்லை. அவற்றை, மோடி தலைமையிலான குஜராத் அரசுதான் வழங்கியது. காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் மதவன்முறைகள் நிகழ்ந்ததால், ஊரடங்கு உத்தரவுகள்தான் பிறப்பிக்கப்பட்டன. நாங்களோ ஊரடங்கு உத்தரவு இல்லாத ஆட்சியை ஏற்படுத்தினோம் .

 

குஜராத் மாநிலம், தாபி மாவட்டத்தில் உள்ள வியாரா நகரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் அமித் ஷா பேசியது:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.