ஜம்மு-காஷ்மீரின் உண்மை நிலவரத்தைகாண ராகுல்காந்தி வர வேண்டும் என அழைக்கிறேன். அவரை அழைத்து வருவதற்கு விமானத்தை அனுப்பத்தயாராக உள்ளேன். அதன்பிறகு உண்மை நிலவரத்தைப் பார்த்துவிட்டு, அவர் பேசவேண்டும். ராகுல் காந்தி பொறுப்பான தலைவர். அவர் இதுபோல பேசியிருக்கக்கூடாது.

மத கண்ணோட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட வில்லை. நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்காகவும்தான் அது ரத்துசெய்யப்பட்டது. இதை சிலர் வேண்டுமென்றே பிரச்னையாக்கி வருகின்றனர். அவர்களது முயற்சி வெற்றிபெறாது. வெளிநாட்டு ஊடகம் இதை பிரச்னையாக்க பார்த்தது. இதையடுத்து வெளிநாட்டு ஊடகத்தை எச்சரித்தோம்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அங்கு வந்து துப்பாக்கித்தோட்டா பாய்ந்து யாரேனும் சிகிச்சை எடுக்கிறார்களா என பார்க்கலாம். 4 பேர் கால்களில் பெல்லட்தோட்டா பாய்ந்து சிகிச்சை எடுத்துவருகின்றனர். அதுவும் பெரிய காயமில்லை.

காஷ்மீர் வதை முகாம்களாக மாறிவருவதாக கூறுவதை ஏற்க முடியாது. அந்த முகாம் எப்படி இருக்கும் என்பதை அறிவேன். நான் 30 முறை சிறைக்குசென்றுள்ளேன். எமர்ஜென்சி காலத்தில் மக்களை ஒன்றரை ஆண்டுகாலம் சிறைவைத்தது  காங்கிரஸ். அப்படி சிறையில் இருந்தும், யாரும் அதை வதை முகாம் எனத் தெரிவிக்க வில்லை. தடுப்புக்காவல் என்பது வதை முகாமா?.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பக்ரீத் சிறப்புத்தொழுகை அமைதியாக நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரில் சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இதனால் வழக்கமான சூழ்நிலையில் மக்கள், பொருட்களை வாங்கிச்சென்றனர்.
அதேநேரத்தில் பிரச்னைக் குரிய இடங்களில் மட்டும், அமைதி நிலவுவதை பாதுகாப்புப் படையினர் உறுதி செய்தனர். ஏனெனில் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது

தில்லியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை இரவு பேட்டியளித்த ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நிலவுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதேபோல், பிற கட்சித்தலைவர்கள் சிலரும் ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தனர்.இது குறித்து ஜம்முவில் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் திங்கள் கிழமை செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்:

Comments are closed.