காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தேச துரோகிகளை சந்தித்து  ஆதரவுதெரிவிப்பது என்ன நியாயம் என்று மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நேற்று பெங்களூருவில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்துபேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜ ஆட்சியில் எந்தமுறைகேடும் இல்லை என்பதால் காங்கிரஸ் கட்சியினரால் சகித்துகொள்ள முடியவில்லை. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்திற்கும் பாஜ அரசிற்கும் எந்ததொடர்பும் இல்லை.

சட்டப்படி அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் அமைப்பின் தலைவர் கன்யாகுமார் மற்றும் மாணவர்களை ராகுல் காந்தி சந்தித்து பேசியது என்ன நியாயம். நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட தேச துரோகிகளுக்கு ஆதரவாக ராகுல்காந்தி செயல்படலாமா? நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி விஷயத்தில் அரசியல் செய்யக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply