பாஜ தேசியசெயலாளர் ஸ்ரீ காந்த்சர்மா கூறியதாவது: பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் அவரது திமிர்த்த னத்தையும், திறமை யின்மையையும் காட்டுகிறது. தினம்தினம் ஏதாவது ஒரு புது குற்றச்சாட்டை சொல்லி டிஆர்பி ரேட் விகிதத்தை ஏற்றும் அரசியல்வித்தையில் அவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் வேண்டுமானால் போட்டி போட்டுக்கொள்ளட்டும். இதனால் தலைப்பு செய்திகளில் வேண்டுமானால் இடம்பிடிக்கலாம். பிரச்னையை பற்றி ராகுல் நாடாளுமன்றத்தில் பேசவேண்டும். வெளியே பேசவேண்டாம்.

ஒருபுறம் சாதாரண மக்கள் நலனுக்காக பேசுவதாக ராகுல்தெரிவிக்கிறார். மறுபுறம் 3 வாரங்களாக நாடாளுமன்றத்தை நடத்த விடவில்லை. கருப்புபணம் மற்றும் ஊழலுக்கு எதிராக மோடி எடுத்த நடவடிக்கைகளால் அவர்கள் அதிர்ந்துபோய் உள்ளனர். இதனால் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளனர். காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டில் இருந்து அவர்களது மன நிலை இந்த நடவடிக்கையால் பாதிக்க பட்டுள்ளது தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply