கர்நாடக சட்ட சபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் பிரசாரகூட்டம், பந்த்வால் என்ற இடத்தில் நேற்று  நடைபெற்றது. இந்தகூட்டத்தின் தொடக்கத்தில் பள்ளி குழந்தைகளை பொதுக்கூட்ட ஏற்பாட்டாளர்கள் ‘வந்தே மாதரம்’ தேசபக்தி பாடலை பாடவைத்து உள்ளனர்.

 

அப்போது ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணு கோபாலிடம் தன் கைக்கெடிகாரத்தை காட்டி, இன்னும் பலநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டிய நிலையில் நேரம் ஆகிவிட்டதை சுட்டிக்காட்டினார், அவர் உடனே குழந்தைகளை ‘வந்தே மாதரம்’ பாடலை பாதியிலேயே நிறுத்த வைத்ததார். இதுபெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் முரளிதர ராவ், பெங்களூருவில் நிருபர்களிடம் பேசுகையில் சாடினார்.

‘‘காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் நீண்டகாலமாக சுதந்திர இயக்கத்தின் மரபுகளை இழந்து, சுதந்திர போராட்ட வீரர்களின் மரபுகளை மறந்துவிட்டனர். நேற்று இரவு பந்த்வாலில் நடந்த நிகழ்ச்சி, இதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. ராகுல்காந்தி தேசிய பாடலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தையும் அவமதித்துவிட்டார். அவர் நாட்டிடம் மன்னிப்புகேட்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

Leave a Reply