காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் வெளிநாடு சென்றுவிட்டதால் நாட்டில் வெப்பநிலை அதிகரித்துவிட்டது,  உத்திர பிரதேச வளர்ச்சிக்காக இதுவரை எதுவும்செய்யாத பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளை 2017 சட்டசபை தேர்தலில் தூக்கிஎறியுங்கள். கடந்த காலங்களில் மத்தியில் காங்., ஆட்சிக்கு கொண்டுவந்தது இவ்விரு கட்சிகளும் தான்.

 

வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பை உயரசெய்த பேசும் பிரதமரை பா.ஜ., தந்துள்ளது. முந்தைய காங்., பிரதமர் முக்கியமான பிரச்னை களுக்கு மட்டும், மிகவும் அரிதாகவே வாய்திறந்துபேசுவார். காங்., துணை தலைவர் ராகுல் வெளிநாட்டிற்கு சென்றதால் இந்தியாவில் வெப்ப நிலை அதிகரித்து விட்டது. இதற்கும் பா.ஜ., அரசிடம் விபரம்கேட்பார்கள். சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியில் கிரிமினல்கள் மற்றும் நிலமாபியாக்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. இதனால் சட்டஒழுங்கும் முற்றிலும் சீர்குலைந்து விட்டது

பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா உத்திரபிரதேசத்தில் பேசியது

Leave a Reply