ராஜஸ்தானில் அரசியல் வாதிகளின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க, மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு, அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட வழி முறைகளைப் பின்பற்றுவது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க மத்திய அமைச்சர் கஜேந்திர ங் செகாவத் உள்பட சில பாஜக தலைவர்கள் சதிசெய்ததாகக் குற்றம்சாட்டி காங்கிரஸ் தரப்பு சிலஆடியோக்களை வெளியிட்டது.

இந்நிலையில்  அரசியல்வாதிகளின் தொலைபேசி அழைப்புகளை எவ்வாறு காங்கிரஸ் ஒட்டுக்கேட்டது என்று பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், அந்த ஆடியோ விவரங்கள் உண்மை என்று பதிவுசெய்யாத நிலையிலும் கூட அவை உண்மையானவை என்று முதல்வர் கெலாட் உள்ளிட்ட மூத்தகாங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

இது குறித்து காங்கிரஸ் கட்சிக்கு கேள்வி எழுப்பியிருக்கும் பத்ரா, தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப் பட்டதா? அவ்வாறு ஒட்டுக் கேட்கப்பட்டால் அதில் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? ராஜஸ்தான் மாநில அரசு தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தவறான வழிமுறைகளை பின்பற்றுகிறதா? என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.