பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியின் பாதுகாப்புகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மரில் வரும் 7, 8 ஆகிய இருதினங்கள் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். இதில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய நான்கு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள், புதன் கிழமை தெரிவித்ததாவது:பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மாநிலங்களில் அண்மைக்காலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல்களும், கள்ள நோட்டுப்புழக்கம், கடத்தல்கள் உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தற்போது எல்லையில் பதற்றம் நிலவுகிறது.


இதுகுறித்து வரும் 7 , 8-ஆம் தேதிகளில் ராஜ்நாத்சிங் ஜெய்சல்மரில் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். அப்போது, ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்துறை பொறுப்புவகிக்கும் அந்த மாநிலங்களின் முதல்வர்கள் மெஹபூபா முஃப்தி, வசுந்தரா ராஜே, விஜய்ரூபானி, பஞ்சாபில் உள்துறை பொறுப்புவகிக்கும் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோருடன் எல்லை நிலவரம் குறித்து விவாதிக்க உள்ளார்.பின்னர், ஜெய்சல்மரை அடுத்த முராரில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் அவர் ஆய்வுமேற்கொள்ள உள்ளார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:

Leave a Reply