இன்று மாமல்லபுரத்தில் நமது பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்த ராணுவக் கண்காட்சி ஒரு மாபெரும் நிகழ்வு. முப்படைத் தளபதிகளும் உலகெங்கிலுமுள்ள ராணுவ தொழில்நுட்ப உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட நிகழ்வு. இந்தக் கண்காட்சி 2018ல் தான் தென்னிந்தியாவில் முதன் முறையாக, அதுவும் தமிழ்நாட்டில் நடக்கிறது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். தமிழக முதல்வரும் துணை முதல்வரும் இதை மறக்காமல் தங்களது உரையில் குறிப்பிட்டனர். ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் அமையவிருக்கும் "ராணுவ உற்பத்தி தொழில் பாதை" (Defense Production Corridor) பற்றி அறிவித்து, அதன் பிறகு இந்த பிரம்மாண்டமான கண்காட்சியும் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பல்துறை தொழில் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கும் அதிமுக்கியமான விஷயம் இது.

ஆனால் தமிழ் செய்தி ஊடகங்களில் அங்கங்கு மேய்ந்து பார்த்தால், இதற்கு உரிய முக்கியத்துவம் அளித்து, எவனும் பேசுவதாகத் தெரிவதில்லை. இதைப் பற்றி ஒரு உரையாடல், ஒரு தகவல் தொகுப்பு இல்லை. எல்லாவற்றிலும் கருப்புக் கொடி காட்டிய லும்பன்களையும் கருப்பு பலூன் விட்ட சும்பன்களையும் பற்றி மயிர்பிள்ககும் விவாதம்.. கருப்பு பலூனுக்கு "பயந்து" பிரதமரின் ஹெலிகாப்டர் தடம் மாறியதா என்று ஒரு கேனை டிவி நெறியாளன் வாய்பிளந்து பேசிக் கொண்டிருக்கிறான். வெளங்கிடும்.

தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் காவிரி பிரசினையைப் பற்றி கருத்து கூறியிருக்க வேண்டும் என்று ஆளாளுக்கு பேசுகிறான்கள். எதற்கு? அந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு தெளிவாக ஏற்கனவே கூறப்படிருக்கிறது. பிரதமர் என்ன பேசவேண்டும் என்பதை இந்த தேசவிரோத லும்பன்களின் "போராட்ட" கூத்துகள் தீர்மானிக்க வேண்டுமா? எப்போது என்ன பேசுவது என்று அவருக்குத் தெரியும்.

சக மாநிலமான கர்நாடகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் எப்படி ஆணையம் அமைக்க முடியும்? அந்த மாநிலத்தில் தேர்தல் நடக்க இருக்கையில், அதன் தற்போதைய மாநில ஆளும்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருமா வராதா என்பதே கேள்விக்குறியாக இருக்கையில், தடாலடியாக ஆணையம் அமைத்தே ஆகவேண்டும் என்று கூக்குரலிடுவது அறிவுடைமையன்று, சட்ட முறைமையுமன்று. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மாநில அரசின் நிலைப்பாடு மிகவும் சரியானது, பாராட்டுக்குரியது. திமுகவும் அதன் கூட்டாளிகளான இந்த வெறுப்பு கும்பல்களும் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி தேசவிரோத, துவேஷ கருத்துக்களைப் பரப்புகிறார்கள். அவர்களது போராட்டங்கள் முற்றாக நிராகரிக்கப் படவேன்டியவை.

Leave a Reply