ஜம்மு காஷ்மீரில் பயங்கர வாதிகள் தாக்குதலில் 8 துணை ராணுவபடை வீரா்கள் உயிரிழந்தத சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஜம்முகாஷ்மீர் மாநிலம் பம்போரே பகுதியில் ராணுவ வீரர்கள் சென்றவாகனம் மீ்து பயங்கர வாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இச்சம் பவத்தில் 8 வீரா்கள் உயிரிழந்தனர். 24 பேர் படுகாய மடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 8 துணை ராணுவபடை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. காயமடைந்த வீரர்கள் விரைவில் குண மடைய இறைவனை பிரார்த்திகிறேன் என்றார்.

சம்பவம்குறித்து விசாரணை நடத்திய சிஆர்பிஎப்., இயக்குநர் கூறுகையில் " ராணுவவீரர்கள் மீதான தாக்குதல் பயங்கர வாதிகளால் திட்டமிட்டு நடத்திப்பட்டுள்ளது" என்றார். மேலும் மத்திய அமைச்சர் பாதுகாப்புதுறை அமைச்சர் மனோஜ் பாரிக்கர் இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இறங்கல் தெரிவித்தார்.

 

Leave a Reply