பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தொடர் புடைய அதிகாரிகள், அமைச்சர்கள் தவிர வேறுயாரும் காரசாரமாக விவாதிக்க வேண்டாம் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத் தியுள்ளார்.
 
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ச்சூழல் மூண்டுள்ள நிலையில், பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவுடன் பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் புதன் கிழமை ஆலோசனை நடத்தினார்.
 
இந்தக்கூட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதி, எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதி, நதிகளுக்கு அப்பால் உள்ள தொலைதூர பகுதி ஆகியவற்றில் நிலவிவரும் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதல்குறித்து, அதிகாரப் பூர்வமான நபர்கள் மட்டுமே பேசவேண்டும் என்றும் மற்ற அமைச்சர்கள் அதுகுறித்து பேசுவதை தவிர்த்து விடுமாறும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply