இந்திய ராணுவ வீரர்களின் தீரத்தையும், தியாகத்தையும் பாராட்டிய பிரதமர் மோடி தீபாவளியை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
 
பிரதமர் நரேந்திர மோடி, மாதந்தோறும் அகிலஇந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாடி வருகிறார். இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, தீபாவளியானது, உலக பண்டிகையாகிவிட்டது. அமெரிக்க தபால் துறை, தீபாவளிக்காக தபால் தலை வெளியிட்டுள்ளது. இருளை அகற்றி, ஒளியை ஏற்றும் தீபாவளியைப்போல், நம்மிடையே உள்ள மூட நம்பிக்கை, எழுத்தறிவின்மை, வறுமை போன்ற சமூக தீமைகளும் அகற்றப்பட வேண்டும்.
 
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், தீபாவளி கொண்டாடவேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது, பெற்றோர் கூடவே இருக்கவேண்டும்.  
 
சமீபத்திய சில நிகழ்வுகளின் காரணமாக, நமது ராணுவ வீரர்கள், நாட்டின் பாதுகாப்புக்காக அவர்கள் பல்வேறு தியாகங்களை செய்துவருகிறார்கள். அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வும், உழைப்பும் என்னை திக்குமுக்காட செய்கிறது. அவர்களின் தியாகம், எனது மனதையும், இதயத்தையும் தொட்டுவிட்டது.
 
சில ராணுவ வீரர்கள், பாலை வனத்தில் பணியில் இருக்கிறார்கள். சிலர், இமயமலையில் காவல்காக்கிறார்கள். சிலர் தொழிற்சாலைகளிலும், சிலர் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நாட்டின் பாதுகாப்புக்காக அவர்கள் எண்ணற்ற துயரங்களை தாங்கிவருகிறார்கள். அவர்களின் பணியால்தான், நாம் நிம்மதியாக தீபாவளி கொண்டாடுகிறோம். பண்டிகை கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் போது, நாம் அவர்களை நினைவு கூர்ந்தால், அவர்களுக்கு வலிமையும், புத்துணர்வும் கிடைக்கும். 
 
எனவே, இந்த தீபாவளியை முப்படை வீரர்களுக்கு அர்ப்பணிப் போம். அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லுமாறு நான்விடுத்த அழைப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 

வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் நமது பலம். நாடுமுழுவதும் ஒற்றுமையை உருவாக்கவும், பிரிவினைவாத மனப் பான்மைனைய வீழ்த்தவும் வழிகாண வேண்டிய பொறுப்பு, அனைத்து குடிமக்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இருக்கிறது என்றார்.

Leave a Reply