ஹரியானா மாநிலம், ஹிசார்நகரில், நேற்று நடந்த, ராணுவ தினவிழாவில், துணிச்சலுடன் செயல்பட்ட வீரர்களுக்கு, பிரதமர் நரேந்திரமோடி விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

ஹரியானாவில்,  ராணுவ தினம் அனுசரிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திரமோடி, வீறு நடை போட்டு வந்த ராணுவ வீரர்களுக்கு வணக்கம்செலுத்தினார். துணிச்சலுடன் பணியாற்றிய ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, விருதுகள்வழங்கி கவுரவித்தார்.

இதுபற்றி, 'டுவிட்டர்' சமூக வலை தளத்தில், மோடி வெளியிட்ட பதிவில், 'துணிச்சல், மன உறுதி, அர்ப் பணிப்பு உணர்வுடனும் செயலாற்றி வரும் ராணுவ வீரர்களுக்கு, ராணுவதினத்தில் வணக்கம் செலுத்துகிறேன்' எனக் கூறியுள்ளார்.

Leave a Reply