ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட, பாஜக.,வில் வழக்கமான தலைகளுக்கு பதிலாக இந்த முறை நயினார் நாகேந்திரனுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டிருக்கிறது.

பெயர்: நயினார் நாகேந்திரன்

வயது: 59, கல்வி: எம்.ஏ. (பிறந்த தேதி: 1960 அக்.16)

ஊர்: பணகுடி அருகேயுள்ள தண்டையார்குளம்

தொழில்: தொழிலதிபர் (பண்ணையார் என்ற பட்டப் பெயர் உண்டு)

1989-ல் அ.தி.மு.க.வில் சேர்ந்து, முதலாவதாக பணகுடி நகர செயலாளராக பதவி, பின்பு ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணிச் செயலர், பின்னர் திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர், ஜெயலலிதா பேரவையின் மாநில செயலர், இடையில் தேர்தல் பிரிவு இணை செயலர், மீண்டும் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலர். பின்னர் கட்சியில் இருந்து வெளியேறி, பாஜக.,வில் இணைந்தார். ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க-வில் செயல்பட விருப்பம் இல்லாததன் காரணமாகவே அக்கட்சியில் இருந்து விலகி, பி.ஜே.பி-யில் இணைந்ததாக அப்போது நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். 2017 ஆகஸ்டில் பாஜக.,வில் இணைந்தார்.

2001ல் முதன் முறையாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார்.

2006-ல் மீண்டும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டார். 2011 தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப் படவில்லை.

தொடர்ந்து 2016ல் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு 606 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

குடும்பம்: மனைவி- சந்திரா, மகன்கள்- நயினார் பாலாஜி, (பி.டெக்), விஜய் சண்முக நயினார் மகள்: காயத்ரி (எம்.பி.பி.எஸ்)

இம்முறை திருநெல்வேலி தொகுதியில் அதிமுக., போட்டியிடுவதால், ராமநாதபுரம் தொகுதியில் இருந்து போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு பாஜக., வாய்ப்பு அளித்துள்ளது.

இந்நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக இப்போதே சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களும் கொடிகட்டிப் பறக்கின்றன. ராமநாதபுரம் தொகுதியில் இருந்து எப்போதும் இஸ்லாமியர்களே போட்டியிடுவதால், இம்முறை கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக நயினார் நாகேந்திரன் உள்ளார்.

இதனை சமூக வலைத்தளங்களில் குறிப்பிடும் சிலர், ராமநாதபுரம் மக்களே! இரண்டு திராவிட கட்சிகளும் தொடர்ந்து இஸ்லாமிய மதவாதிகளுக்கும் அடிப்படைவாத இஸ்லாமிய கட்சிகளுக்கும் வாய்ப்பளித்து உங்களை ராமநாதபுரத்தில் சிறுபான்மை மக்களாக மாற்றி வைத்துள்ளது! இந்த முறை ராமநாதபுரம் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு ஒரு இந்து செல்ல வேண்டுமா இல்லை ஒரு இஸ்லாமியன் செல்ல வேண்டுமா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்… – என்று குறிப்பிட்டு வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

 

https://www.kamadenu.in/news/tamilnadu/21035-industrial-minister.html

Tags:

Leave a Reply