ராமநாதபுரம் மக்களவைத்தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சனிக்கிழமை பரமக்குடி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார்.
பரமக்குடி அருகே காலை தனது பிரசாரப்பயணத்தைத் தொடங்கிய அவர், அரியனேந்தல், வெங்கிட்டன் குறிச்சி, பாம்பூர், மேலாய்க்குடி, விளத்தூர், புதுக்குடி, வழிமறிச்சான், பிடாரிசேரி, பார்த்திபனூர், சோமநாதபுரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்குகள்சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவருடன் சென்ற தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன், மத்திய, மாநில அரசுகளின்  திட்டங்களை விளக்கிப்பேசினார். மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும், எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அதிமுக அரசும் தொடர்ந்து மக்களின் நலத்திட்டங்களை நிறைவேற்ற நயினார் நாகேந்திரனுக்கு தாமரை சின்னத்திலும், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்  என்.சதர்ன் பிரபாகருக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களிக்கவேண்டும் என்றார் அமைச்சர்.
பிரசாரத்தின் போது, ராமநாதபுரம் தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கொண்டு வரப்படும் என பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்தார்.

Leave a Reply